பெ.நா.பாளையம்: கோவை அருகே மயிலை விழுங்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.
கோவை அடுத்த தேவையம்பாளையம் வனப்பகுதி அருகே ஸ்டீபன் என்பவரின் தோட்டம் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவில் 7 அடி நீள மலைபாம்பு அவரது தோட்டத்தில் திடீரென புகுந்தது.
கோவை அடுத்த தேவையம்பாளையம் வனப்பகுதி அருகே ஸ்டீபன் என்பவரின் தோட்டம் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவில் 7 அடி நீள மலைபாம்பு அவரது தோட்டத்தில் திடீரென புகுந்தது.
தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளத்தை சாப்பிட வந்திருந்த மயில்களில் குட்டி மயிலை பிடிக்க மலைப்பாம்பு முயன்றது. இதை பார்த்த ஸ்டீபன் சத்தம் போட்டார்.
இதையடுத்து குட்டி மயில் தப்பிச்சென்றது. தொடர்ந்து அங்கேயே முகாமிட்டிருந்த மலைப்பாம்பு சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் அங்கு வந்த மயிலை கவ்வி பிடித்து விழுங்கியது. இது குறித்து ஸ்டீபன் வனத்துறையினருக்கு தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து நகர முடியாமல் படுத்திருந்த பாம்பை பிடித்து சென்று, நேற்று அடர் வனப்பகுதியில் விட்டனர்.
0 comments: (+add yours?)
Post a Comment