make gif

உடுமலை,பொள்ளாச்சியில் வைகுண்ட ஏகாதசி விழா

உடுமலை: உடுமலை நெல்லுக்கடை வீதி சவுந்திரராஜப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடக்கிறது. விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், அதிகாலை 5.30 மணிக்கு  சொர்க்க வாசல் திறப்பு,  காலை 11.30 மணிக்கு திருவீதி உலா புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு உற்சவர் ஏகாதசி அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
உடுமலை அருகே பெரியபட்டி ஸ்ரீதேவி, பூதேவி சீனிவாச அனுமந்தராய சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, சித்தி விநாயகர் கோவிலில்,  பெருமாளுக்கு அபிஷேக பூஜை, அலங்காரம், நைவேத்யம், தீபாராதனை உள்ளிட்ட  சிறப்பு பூஜைகளும், இரவு 9.00 மணிக்கு பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
 உடுமலை சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில், பிரசன்ன விநாயகர் கோவிலிலுள்ள  சவுரிராஜப்பெருமாள் சன்னதி, கொழுமம் கல்யாண வரதராஜப்பெருமாள் கோவில், கொமரலிங்கம் ஆத்தோரம் வெங்கட்ரமணசுவாமி கோவில், ஏரிப்பாளையம் வரதராஜப்பெருமாள் கோவில், கோட்டமங்கலம் வரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, அபிஷேகம், தீபாராதனை, சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
 பொள்ளாச்சி :  பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை (17ம் தேதி) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று, நாளை (17ம் தேதி) மற்றும் வரும் 18ம் தேதி ஆகிய மூன்று நாட்களுக்கு மூலஸ்தானத்திலுள்ள மூலவருக்கு முத்தங்கி சேவை நடக்கிறது. நாளை காலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும். இதில், காய், கனி, திரவிய பொருட்கள் கட்ட விரும்பும் பக்தர்கள், இன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கோவிலில் பொருட்களை வழங்கலாம்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர். அதேபோல், பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டிலுள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை அதிகாலை 4.30 மணிக்கு வாசுதேவ புண்ணியாவாசனமும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின், மகா அபிஷேகம் நடக்கிறது.
Download As PDFPrint this post

0 comments: (+add yours?)

Post a Comment

பார்த்தவர்கள்

பார்த்தவர்கள்

free counters free counters
Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket