உடுமலை: உடுமலை நகர ரோடு சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து "சிக்னல்'கள் காட்சிப்பொருளாக மாறியுள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் நெரிசலும்,விபத்துகளும் அதிகரித்துள்ளன. உடுமலை நகரத்தில் பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு சந்திப்பு, தாராபுரம் ரோடு டிவைடர் மற்றும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இரண்டு பள்ளிகளின் அருகில் கடந்தாண்டு போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. தன்னார்வ அமைப்பினர் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் இந்த சிக்னல்கள் இயக்கப்பட்டு வந்தன. முக்கிய சந்திப்புகளில் சிக்னல்கள் இயங்கி வந்ததால் விபத்துகளும், நெரிசலும் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சிக்னல் செயல்பாடு நிறுத்தப்பட்டு அவை காட்சிப்பொருளாக மாறின. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் ஸ்டாண்ட் அருகில் போக்குவரத்தில் அதிக நெரிசல் ஏற்பட்டது. பழநி ரோட்டிலிருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட்டில் நுழையும் முன் வாரச்சந்தை ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் ரோட்டை கடந்து செல்ல முயன்றன. இதனால், அப்பகுதியில் குறுக்கும், நெடுக்குமாக வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தளி ரோடு சந்திப்பு பகுதியிலும் இதே பிரச்னை நிலவியது. பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு உடுமலை நகரில் அமைக்கப்பட்ட சிக்னல்கள் காட்சி பொருளானதால் வாகன ஓட்டிகள் வேதனையடைந்தனர். இந்நிலையில், போக்குவரத்து போலீசாரும் போதிய அளவு இல்லாததால் நகரத்தில் வாகன பயணம் அபாயமானதாக மாறியது. சிக்னல்களை மீண்டும் இயக்கி நெரிசலை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்," நகரில் செயல்படாமல் உள்ள சிக்னல்கள் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். போக்குவரத்து போலீசில் இருந்த காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது இரண்டு எஸ்.ஐ., மற்றும் நான்கு காவலர்கள் இந்த பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரோடு சந்திப்புகளிலும், பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிக்னல் இயங்க துவங்கியதும் நெரிசலும், விபத்துகளும் கட்டுப்படுத்தப்படும்' என்றனர்.
Download As PDFPrint this post
EARN MONEY WITHOUT INVESTMENT
உடுமலையில் காட்சி பொருளான போக்குவரத்து "சிக்னல்': விபத்துகள் அதிகரிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: (+add yours?)
Post a Comment