make gif

அமராவதி, திருமூர்த்தி அணையிலிருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றம்



உடுமலை: உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையிலிருந்து தொடர்ந்து 12 வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்குட்பட்ட 55 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வட கிழக்கு பருவ மழையால் அமராவதி அணைக்கு  நீர் வரத்து அதிகரித்து, நீர் மட்டமும் வேகமாக உயர்ந்தது.  கடந்த நவம்பர் 24ம் தேதி, இரவு 11.00 மணிக்கு அணை நீர் மட்டம் அணை நீர் மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 88.03 அடியை தொட்டதையடுத்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.  தொடர்ந்து, 12 நாட்களாக அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  நேற்று காலை நிலவரப்படி அணை நீர் மட்டம் 89.27 அடியாகவும், நீர் இருப்பு 3,980.90 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,805 கன அடி நீர் வரத்து நிலவியது. அணையிலிருந்து வினாடிக்கு 1,197 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து தொடர்ந்து நான்கு நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  திருமூர்த்தி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்த கன மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததோடு, காண்டூர் கால்வாய் வழியாகவும் நீர் வரத்து அதிகரித்தது. அணை நீர் மட்டம் வேகமாக உயரத்துங்கியது.  கடந்த 3ம் தேதி காலை 8.00 மணிக்கு, மொத்தமுள்ள 60 அடியை தொட்டதையடுத்து, அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் பிரதான கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டது. தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக அணை நிரம்பிய நிலையில் உள்ளதால், அணைக்கு வரும்  நீர் அனைத்தும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.  நேற்று காலை நிலவரப்படி அணை நீர் மட்டம் 58.45 அடியாகவும், நீர் இருப்பு 1868.52 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, பாலாற்றின் மூலம் 202 கன அடி நீர் வரத்தும், காண்டூர் கால்வாய் வழியாக 643 கன அடி நீர் வரத்தும் நிலவியது. அணையிலிருந்து , பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 900  கன அடி நீரும், உடுமலை கால்வாய் வழியாக 59 கன அடி நீரும் உபரியாக வெளியேற்றப்படுகிறது.
Download As PDFPrint this post

0 comments: (+add yours?)

Post a Comment

பார்த்தவர்கள்

பார்த்தவர்கள்

free counters free counters
Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket