make gif

உடுமலை-சின்னார் ரோடு மேம்பாடு பணி: வனத்துறை அனுமதி அளிக்க கோரிக்கை

உடுமலை: வனத்துறை அனுமதி கிடைக்காததால், உடுமலை-சின்னார் ரோட்டில் மேம்பாட்டு பணிகள் பல ஆண்டுகளாக தடைபட்டு ஒதுக்கப்படும் நிதி பிற பணிகளுக்கு பயன்படுத்தப்படும் நிலை உள்ளது. உயிரிழப்புகளை குறைக்க மேம்பாட்டு பணிகளுக்கு வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலையிலிருந்து கேரளா மாநிலம் மூணாறுக்கு செல்லும் ரோடு இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரோடாக உள்ளது. இந்த ரோட்டில் உடுமலையிலிருந்து சின்னார் வரையுள்ள 28 கி.மீ., பகுதி நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள் ளது. ஒன்பதாறு செக்போஸ்ட்டிலிருந்து சின்னார் செக்போஸ்ட் வரை 20க்கும் அதிகமான கி.மீ., ரோடு வனத்துறை கட்டுப்பாட்டு பகுதி வழியாக செல்கிறது. இந்த ரோட்டில் சுற்றுலா பயணிகள் மற்றும் அம்மாநிலத்திற்கு காய்கறிகள் உட்பட பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் அதிகளவு செல்கின்றன.வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியில் பல இடங்களில் ரோடு படுமோசமான நிலையில் உள்ளது. குறுகிய பாலங்களும், ரோட்டோர பள்ளங்களும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும், விபத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக 19/2 கி.மீட்டரிலுள்ள "எஸ்' வளைவு பகுதியில் வாகனங்கள் எளிதில் திரும்ப முடியாமல் திணறும் நிலை உள்ளது.இப்பகுதியில் சரக்கு வாகனங்கள் விபத்திற்குள்ளாவதும், இருமாநிலங்களுக்கும் இடையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வந்தது. இந்நிலையில், வளைவு பகுதியை மேம்படுத்தி விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், பணிகளை மேற்கொள்ள வனத்துறை ஒப்புதல் அளிக்கவில்லை.இதனால், மாற்று ஏற்பாடாக வளைவு பகுதியில் தடுப்பு சுவருக்கு பதிலாக பேரிகார்டு போன்ற நீண்ட தகடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்தனர். பிற இடங்களில் காணப்படும் குறுகிய பாலங்கள், பள்ளங்களின் அருகில் தடுப்பு சுவர்கள், தொடர் பராமரிப்புபணிகள், குண்டும், குழியுமான இடங்களில் சிறப்பு மேம்பாடு ஆகிய திட்டங்களை செயல்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசு ஒப்புதலுக்கு அனுப்பினர்.  ரோட்டின் முக்கியத்துவம் கருதி அரசும் 70 லட்ச ரூபாய் வரை சின்னார் ரோடு மேம்பாட்டிற்காக ஒதுக்கியது. ஆனால், குறுகிய பாலங்களை விரிவுபடுத்தவும், தடுப்பு சுவர் அமைக்கவும் வனத்துறை அனுமதி நெடுஞ்சாலைத்துறையினருக்கு கிடைக்கவில்லை. வளைவு பகுதியை மேம்படுத்தவும் இதே நிலை தொடர்கிறது. தற்போது, பழுதடைந்துள்ள இரண்டு தடுப்பு சுவர்களை பராமரிக்க மட்டும் அனுமதி கிடைத்துள்ளதால் அப்பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ரோடு மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி வேறு பணிகளுக்கு ஆண்டுதோறும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
வனவிலங்குகள் பாதுகாப்பிற்காக வனச்சட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால், வன கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள ரோட்டை மேம்படுத்த அனுமதி கிடைப்பதில்லை. வன உயிரினங்களை காப்பதை போல் இந்த ரோட்டில் மனித உயிரிழப்புகளையும் தடுக்க மேம்பாட்டு பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Download As PDFPrint this post

0 comments: (+add yours?)

Post a Comment

பார்த்தவர்கள்

பார்த்தவர்கள்

free counters free counters
Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket