உடுமலை : உடுமலை தாலுகாவில் சட்ட மேலவை தொகுதி வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே 1,691 பேர் உள்ள நிலையில், புதிதாக பெயர் சேர்க்க 1,579 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக சட்ட மேலவை மேற்கு மண்டல தொகுதிக்குட்பட்ட உடுமலை தாலுகா வாக்காளர் பட்டியல் நவம்பர் ம் தேதி வெளியிடப்பட்டது. பட்டதாரிகள் தொகுதி வாக்காளர் பட்டியலில் 1,388 பேரும், ஆசிரியர் தொகுதிக்கு 303 பேரும் உள்ளனர். உடுமலை நகர பகுதியிலுள்ளவர்களுக்கு ராஜேந்திரா ரோடு அரசு உயர் நிலைப்பள்ளியும், கிராம பகுதியிலுள்ளவர்களுக்கு கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியும் ஓட்டுச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி விண்ணப்பங்கள் குறைந்த நிலையில், கடந்த 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், கால நீடிப்பு செய்யப்பட்டு, நாளை விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, புதிதாக பட்டதாரிகள் தொகுதிக்கு 1,390 பேரும், ஆசிரியர் தொகுதிக்கு 189 பேரும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Download As PDFPrint this post
0 comments: (+add yours?)
Post a Comment