make gif

உடுமலையில் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி

உடுமலை:கோவை மண்டல அளவில் நடந்த பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கூடைபந்து போட்டியில் ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பெற்றது.
உடுமலை பாலப்பம்பட்டி ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில், கோவை மண்டல அளவில் கூடைப்பந்து போட்டி நடந்தது. இதில், கோவை மாவட்ட அளவில், பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 19 அணிகள் பங்கேற்றன. கல்லூரி செயலர் சின்னசாமி துவக்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் மற்றும் ஐ.பி.ஏ.,ஏ., துணைத்தலைவருமான செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.அரையிறுதி போட்டியில், கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா, மேட்டுப்பாளையம் நஞ்சையலிங்கம்மாள், உடுமலை ருத்ரவேணிமுத்துசாமி, கோவை பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரி அணிகள் விளையாடின. இறுதிப் போட்டியில், ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியும், கோவை பி.எஸ்.ஜி., கல்லூரியின் அணிகளும் மோதின.

இதில், உடுமலை ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரி அணி 58 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்று, மாநில அளவில் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.கோவை பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாமிடமும், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாமிடமும், மேட்டுப்பாளையம் நஞ்சையலிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி நான்காமிடமும் பெற்றன. முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன. மூன்று, நான்காமிடம் பெற்ற அணிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.பரிசுகளை கல்லூரி செயலர், முதல்வர் செல்வக்குமார், உடற்கல்வி இயக்குநர் வெள்ளைச்சாமி, யோகா ஆசிரியர் ஜாபர் அலி வழங்கினர். வெற்றி பெற்ற அணிகளை கல்லூரியின்தாளாளர் வேலுசாமி பாராட்டினர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் துறை தலைவர் செந்தில்குமார், ஆசிரியர் அடைக்கப்பன் செய்திருந்தனர்.
Blogger Templates
Download As PDFPrint this post

0 comments: (+add yours?)

Post a Comment

பார்த்தவர்கள்

பார்த்தவர்கள்

free counters free counters
Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket