
EARN MONEY WITHOUT INVESTMENT
பிரசன்ன விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
உடுமலை:உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, நேற்று சிவகாமி சமேத சிதம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பின், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திரளான பக்தர்கள் இதை கண்டுகளித்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை 5.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகளும், காலை 6.00 மணிக்கு ஆருத்ரா தரினசம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும், 23ம் தேதி மாலை 6.30 மணிக்கு மகாபிஷேகமும் நடக்கிறது.
Download As PDFPrint this post

Subscribe to:
Post Comments (Atom)
0 comments: (+add yours?)
Post a Comment