உடுமலை: தமிழக அரசின் இலவச வேஷ்டி-சேலைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் உடுமலை தாலுகாவிற்கு முதல் கட்டமாக 34 ஆயிரம் இலவச வேஷ்டி- சேலைகள் வந்துள்ளன. தமிழக அரசு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேஷ்டி-சேலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இலவச வேஷ்டி-சேலை வழங்கும் பணிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு பட்டியல் அடிப்படையில், உடுமலை தாலுகாவிற்கு 69, 650 சேலைகள்; 68,992 வேஷ்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், முதல் கட்டமாக 16 ஆயிரம் சேலைகள் மற்றும் 18 ஆயிரம் வேஷ்டிகள் உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளன. முழுமையான அளவு வேஷ்டி-சேலைகள் வந்தவுடன், ரேஷன் கடைகளுக்கு அனுப்பிவைக்கப்படும். அரசு உத்தரவை தொடர்ந்து வினியோகம் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
EARN MONEY WITHOUT INVESTMENT
உடுமலைக்கு முதல்கட்டமாக வந்த 34 ஆயிரம் இலவச வேஷ்டி சேலை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: (+add yours?)
Post a Comment