make gif

உடுமலையில் கல்வி மாவட்டம் அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

0 comments

உடுமலை: "சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், செயல் வழி கற்றல் முறை தொடருமா என்பது குறித்து அரசு தெளிவாக விளக்கமளிக்க வேண்டும்,'' என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. உடுமலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், கல்வித்துறை நிர்வாக வசதிக்காக உடுமலை தனி "கல்விமாவட்டமாக' அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பள்ளிகளில், தற்போது நடைமுறையில் முதல்வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை செயல்வழி கற்றல்முறை உள்ளது. பாடத்திட்டத்தில் செயல்வழி கற்றல் முறை குறித்த தெளிவாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே, சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் போது, செயல்வழி கற்றல் முறை தொடருமா என்பது குறித்தும், செயல்வழி கற்றல்முறை தொடரும் என்றால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது எப்படி ? யார் பயிற்சி அளிப்பது என விளக்க வேண்டும். தரமான கல்வி என்பது மனப்பாடம் செய்யும் முறையிலிருந்து மாறி இயல்பாக அனைத்து திறனும் வெளிப்படும் வகையில், தேர்வு முறைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். இது குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும். ஆசிரியர்களின் அணுகுமுறைகளில், செயல் திறனில் முன்னேற்றம் வளர்க்க திறமையான நிர்வாக அமைப்பை உருவாக்க வழிகாட்டுதல் வேண்டும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் இணைந்து கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாமில் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். கிராம கல்வித்திருவிழா நடைபெறும் நாளில், கல்விதீபம் ஏற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், தலைவர் ஸ்ரீரங்கன், ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், மணி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.Blogger Templates
Download As PDF

திருமூர்த்தி அணையில் சினிமா "செட்'களை 2 நாட்களில் அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவு

0 comments

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBrcOC2UYkSOHgO98gWZNVSidZO0U6LFhKAzMAKmJB9dwjbgjxeWLaqy233uufedjT5uXcwQUsWgK3Qem_UxnirpEW0FJ_iOYdqiQqF9pteqLh82WUJCWK29-Buu4u0WanG_VSizLDDdhl/s400/5+thirumoorthy+Hills+dam.jpg 
உடுமலை: திருமூர்த்தி அணையில், தண்ணீரை மாசுபடுத்தி வரும் சினிமா "செட்'களை இரண்டு நாட்களுக்குள் அகற்ற திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் படப்பிடிப்பு குழுவினருக்கு இதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. உடுமலை அருகே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி அணை, பல லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு ஆதாரமாக உள்ளது. கடந்த ஜன., 24 ம் தேதி முதல் திருமூர்த்தி அணை பகுதியில், முதல்வரின் கதை வசனத்தில் உருவாகும் "பொன்னர்-சங்கர்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. அணையின் ஒரு கரையில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் பகுதியில் பழமையான கோவில், அரண்மனை, போர் முரசுகள் அமைக்கப்பட்டன. இப்பகுதியில் இயல்பாக சுற்றி வந்து கொண்டிருந்த யானைகளின் வழித்தடத்தை மறித்ததால், அவை வேறு பகுதிக்குள் தஞ்சம் அடைந்தன. மேலும், வனவிலங்குகள் மர்மமான முறையிலும் இறந்து கிடந்தன. இவ்வளவு நடந்தும், அனைத்து அரசு துறை விதிமுறைகளையும் மீறி படப்பிடிப்பு நடந்தும், எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அணையின் நீர்மட்டம் இரண்டு நாட்களுக்கு முன் உயர்ந்த நிலையில், படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட "செட்'கள் தண்ணீரில் மூழ்கின. அதிலிருந்து பல்வேறு ரசாயன கழிவுகள் வெளியேறி தண்ணீர் மாசுபட்டது. பாசன ஆதாரமாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள், வன விலங்குகளின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கும் அணை, சினிமா படப்பிடிப்பால் பாதிக்கப்பட்டது பற்றியும், துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், முதல்வரின் கதை-வசனத்திற்காக மவுனம் சாதித்தது குறித்தும், "தினமலரில்' செய்தி வெளியானது. இதையடுத்து, பி.ஏ.பி., திட்ட அதிகாரிகளிடம் படப்பிடிப்பு செட் அமைக்கப்பட்டுள்ள இடங்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதிகாரிகள் அறிக்கையின் படி அணையின் நீர் தேக்க பரப்பில் செட்கள் அமைக்கப்பட்டிருந்ததும், ரசாயன கழிவுகள் தண்ணீர் கலப்பதும் தெரியவந்தது. அறிக்கையின் அடிப்படையில், படப்பிடிப்பிற்கான செட்களை 2 நாட்களில் அகற்ற திருப்பூர் மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அணை பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றிருந்தாலும், நீர் நிலைகள் மாசுபடும் வகையில் "செட்'கள் அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றை அகற்ற இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
Blogger Templates
Download As PDF

பார்த்தவர்கள்

பார்த்தவர்கள்

free counters free counters
Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket