make gif
திருமூர்த்திமலையில் முதன்முறையாக போலீஸ் "செக்போஸ்ட்' :
0 comments
உடுமலை : திருமூர்த்திமலையில் மது அருந்துதல் உட்பட அத்துமீறல்களை தடுக்கவும், வாகனங்களை கண்காணிக்கவும் போலீஸ் செக்போஸ்ட் ஏற்படுத்தப்பட்டு, நேற்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. விடுமுறை நாட்களில் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அணை மற்றும் வனப்பகுதியில் பலர் மது அருந்துவது உட்பட அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், பக்தர்கள் வேதனையடைகின்றனர். இந்நிலையில், திருமூர்த்தி அணைப்பகுதியில் தற்கொலை சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. உடுமலை போலீஸ் உட்கோட்டம் தளி போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் திருமூர்த்திமலை பகுதி உள்ளது. குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தளி போலீசார் இப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு வந்தனர்.
அத்துமீறல்களை தடுக்கவும், தற்கொலைகளை தடுக்கவும் திருமூர்த்திமலைப்பகுதியில் போலீஸ் செக்போஸ்ட் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கோவை பள்ளி குழந்தைகள் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில், கடத்தல்காரர்கள் திருமூர்த்திமலை பகுதிக்கு வந்து சென்றுள்ளனர். போலீஸ் கண்காணிப்பு எதுவும் இல்லாததால் கடத்தல்காரர்கள் இப்பகுதியில் எளிதாக ஊடுருவுகின்றனர்.இதனால், ஏற்படும் பாதிப்புகள் மற்றும் செக்போஸ்ட் அமைக்க வேண்டியதின் முக்கியத்துவம் குறித்து "தினமலரில்' செய்தி வெளியானது. கடந்த மாதம் செக்போஸ்ட் அமைக்க தளி போலீசாரால் இடம் தேர்வு செய்யப்பட்டது.
மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி உத்தரவு அடிப்படையில் நேற்று முதல் திருமூர்த்தி அணை அருகேயுள்ள விருந்தினர் மளிகை பகுதியில் செக்போஸ்ட் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. செக்போஸ்ட்டில் ஷிப்டுக்கு மூன்று போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். வாகன தணிக்கை, அணைப்பகுதியில் ரோந்து, வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களின் எண்களை பதிவு செய்தல், இருசக்கர வாகனங்களில் மதுபாட்டில்களை எடுத்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உட்பட பணிகளை இங்கு நியமிக்கப்பட்டுள்ள போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட்டிற்கு நிரந்தர கட்டடம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டாக கிடப்பில் போடப்பட்டிருந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Blogger Templates
Download As PDF
பழனி
0 comments
http://img.dinamalar.com/data/uploads/WR_821527.jpegBlogger Templates Download As PDF
உடுமலை, மடத்துக்குளம் கிராமங்களுக்கு புதிய எண்கள்: மாவட்ட நிர்வாகம் உத்தரவு
0 comments
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2010,23:33 IST
உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள கிராமங்களுக்கு புதிய எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தின் ஒரு கோட்டமாக உடுமலை இயங்கி வருகிறது. உடுமலை தாலுகா , உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா என இரண்டாக பிரிக்கப்பட்டது. ஏற்கெனவே, ஒருங்கிணைந்த உடுமலை தாலுகாவில் இருந்த போது கிராமங்களுக்கு எண்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. தாலுகா பிரித்த நிலையிலும் பழைய கிராம எண்களே பயன்படுத்தப்பட்டு வந்தன.இந்நிலையில், இரண்டு தாலுகாவிலுள்ள கிராமங்களுக்கும் புதிய எண்கள் வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.உடுமலை தாலுகாவிலுள்ள தென்பூதி நத்தம் கிராமம் எண் 1 ஆகவும்,
சின்னவீரம்பட்டி 2, குறிஞ்சேரி 3, அந்தியூர் 4, பூலாங்கிணர் 5, வெனசபட்டி 6, கணபதிபாளையம் 7, உடுமலை 8, பெரியகோட்டை 9, கணக்கம்பாளையம் 10. ராகல்பாவி 11, ரா.வேலூர் 12, வடபூதிநத்தம் 13, போடிபட்டி 14, கண்ணமநாயக்கனூர் 15, தளி 16, ஜல்லிபட்டி 17, லிங்கமாவூர் 18, வெங்கிட்டாபுரம் 19, சின்னகுமாரபாளையம் 20, குறிச்சிக்கோட்டை 21, பள்ளபாளையம் 22, போகிகவுண்டன்தாசர்பட்டி 23, குரல்குட்டை 24, ஆலாம்பாளையம் 25, குருவப்பநாயக்கனூர் 26, மானுப்பட்டி 27, தும்பலப்பட்டி 28, ஆண்டியகவுண்டனூர் 29, எலையமுத்தூர் 30, கல்லாபுரம் 31, சின்னபாப்பனூத்து 32, பெரியபாப்பனூத்து 33, உடுக்கம்பாளையம் 34, புங்கமுத்தூர் 35, செல்லப்பம்பாளையம் 36, தேவனூர் புதூர் 37, ராவணாபுரம் 38, வலையபாளையம் 39, எரிசனம்பட்டி 40, கொடுங்கியம் 41, தின்னப்பட்டி 42, பெரியவாளவாடி 43, சின்னவாளவாடி 44, சர்க்கார் புதூர் 45, ரெட்டிபாளையம் 46, ஜிலேபிநாயக்கன்பாளையம் 47, அரசூர் 48, கிருஷ்ணாபுரம் 49, தீபாலபட்டி 50, மொடக்குப்பட்டி 51 என புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள சங்கராமநல்லூர் கிராமத்திற்கு எண் 1ம், கொழுமம் 2, கொமரலிங்கம் மேற்கு 3, மெட்ராத்தி 4, காரத்தொழுவு 5, கடத்தூர் 6, கணியூர் 7, ஜோத்தம்பட்டி 8, துங்காவி 9, தாந்தோணி 10, வேடபட்டி 11, மைவாடி 12, சோழமாதேவி 13, சர்க்கார் கண்ணாடிபுத்தூர் 14, அக்ராகாரம் கண்ணாடிபுத்தூர் 15, பாப்பான்குளம் 16, கொமரலிங்கம் கிழக்கு 17, சங்கராமநல்லூர் வடக்கு 18, பூளவாடி 19, ஆத்துக்கிணத்துபட்டி 20, கொண்டம்பட்டி 21, பெரியபட்டி 22, குப்பம்பட்டிபாளையம் 23, ஆமந்தகடவு 24, வடுகபாளையம் 25, குடிமங்கலம் 26, கோட்டமங்கலம் 27, பொன்னேரி 28, புக்குளம் 29, மூங்கில்தொழுவு 30, கொசவம்பாளையம் 31, வாகத்தொழுவு 32, வீதம்பட்டி 33, அணிக்கடவு 34, விருகல்பட்டி 35, புதுப்பாளையம் 36, கொங்கல்நகரம் 37, இலுப்பநகரம் 38, சோமவாரபட்டி 39, தொட்டம்பட்டி 40, பண்ணைக்கிணர் 41, முக்கூடு ஜல்லிபட்டி 42 என கிராம எண்கள் மாற்றியமைத்து, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
Blogger Templates
Download As PDF
உடுமலையில் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி
0 comments
உடுமலை:கோவை மண்டல அளவில் நடந்த பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கூடைபந்து போட்டியில் ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பெற்றது.
உடுமலை பாலப்பம்பட்டி ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில், கோவை மண்டல அளவில் கூடைப்பந்து போட்டி நடந்தது. இதில், கோவை மாவட்ட அளவில், பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 19 அணிகள் பங்கேற்றன. கல்லூரி செயலர் சின்னசாமி துவக்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் மற்றும் ஐ.பி.ஏ.,ஏ., துணைத்தலைவருமான செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.அரையிறுதி போட்டியில், கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா, மேட்டுப்பாளையம் நஞ்சையலிங்கம்மாள், உடுமலை ருத்ரவேணிமுத்துசாமி, கோவை பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரி அணிகள் விளையாடின. இறுதிப் போட்டியில், ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியும், கோவை பி.எஸ்.ஜி., கல்லூரியின் அணிகளும் மோதின.
இதில், உடுமலை ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரி அணி 58 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்று, மாநில அளவில் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.கோவை பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாமிடமும், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாமிடமும், மேட்டுப்பாளையம் நஞ்சையலிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி நான்காமிடமும் பெற்றன. முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன. மூன்று, நான்காமிடம் பெற்ற அணிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.பரிசுகளை கல்லூரி செயலர், முதல்வர் செல்வக்குமார், உடற்கல்வி இயக்குநர் வெள்ளைச்சாமி, யோகா ஆசிரியர் ஜாபர் அலி வழங்கினர். வெற்றி பெற்ற அணிகளை கல்லூரியின்தாளாளர் வேலுசாமி பாராட்டினர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் துறை தலைவர் செந்தில்குமார், ஆசிரியர் அடைக்கப்பன் செய்திருந்தனர்.
Blogger Templates
Download As PDF
உடுமலை அருகே செங்குளம்.
0 comments
இரை தேடி ஓடி
அலைந்த பின்பு, சற்று நேரம் ஓய்வெடுத்து செல்லலாம் என கூட்டமாக இளைப்பாறுகிறதோ இந்த பறவைகள்....பறவைகள் கூடிய இடம்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே செங்குளம்.Blogger Templates Download As PDF
பெதப்பம்பட்டி நால்ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு: மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு
0 comments
உடுமலை:பெதப்பம்பட்டி நால்ரோட்டில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால், நெரிசல் அதிகரித்து மாணவர்கள் தொடர் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி-தாராபுரம் மற்றும் உடுமலை-செஞ்சேரிமலை ரோடு பெதப்பம்பட்டி நால்ரோட்டில் சந்திக்கிறது. பொள்ளாச்சியிலிருந்து பெதப்பம்பட்டிக்கு இயக்கப்படும் பஸ்கள் நால்ரோட்டில் திரும்பி செல்கின்றன.அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் கல்வி நிறுவனங்கள் நிறைந்துள்ள இப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்சுக்காக பெதப்பம்பட்டி நால்ரோட்டில் நிற்கின்றனர்.இந்நிலையில், இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சொந்தமான பகுதிகளில் கடந்த சில மாதங்களில் ஆக்கிரமிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. உடுமலை மற்றும் பொள்ளாச்சி பஸ்கள் நிற்கும் இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளால் பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தப்படும் அவல நிலை உள்ளது.
கடந்தாண்டு பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் ரோடு விரிவாக்க பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.அப்போது போக்குவரத்து நெரிசலை குறைக்க இரண்டு பஸ் ஸ்டாப் நிழற்குடைகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட பகுதியை தற்போது சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பஸ்கள் திரும்புவதற்கு போதிய இடம் இல்லாமல் நெரிசல் ஏற்படுகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நிற்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவாக்கப்பட்ட பகுதி ஒராண்டுக்குள் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு, பஸ் மற்றும் பொதுமக்கள் நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி ரோடு மற்றும் தாராபுரம் ரோட்டில் பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தப்படுவதால் பிற வாகனங்கள் விலகி செல்ல முடிவதில்லை.
இதனால், நெரிசல் ஏற்படும் போது நால்ரோட்டை கடக்கும் மாணவர்கள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் நால்ரோடு பகுதி முழுவதும் நெரிசலால் பாதிக்கப்படும் நிலையிலும் குடிமங்கலம் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொள்வதில்லை.உடுமலை பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பொள்ளாச்சி ரோட்டிற்கு திரும்ப இடையூறாக புளியமரம் இருந்தது. இந்த மரத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் வருவாய்துறை அதிகாரிகளுக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆதிக்கத்தில் சிக்கியிருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதற்கான நடவடிக்கைகளை அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து உடனடியாக எடுக்காவிட்டால் பாதிக்கப்படும் மாணவர்கள் சார்பில் போராட்டங்கள் நடத்த பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
Blogger Templates
Download As PDF
"விரைவில் உடுமலை கல்வி மாவட்டம்'
0 comments
உடுமலை: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, உடுமலை தாலுகாவும் அதில் சேர்க்கப்பட்டது. புதிய மாவட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலகம் அமைக்கப்பட்டு, கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டார். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலிருந்த உடுமலை பள்ளிகள் பிரிக்கப்பட்டு, திருப்பூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன. பள்ளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு வருவாய் மாவட்டத்தில், இரண்டு கல்வி மாவட்ட அலுவலகங்கள் செயல்படுவது வழக்கம். ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் தற்போது வரை ஒரே கல்வி மாவட்ட அலுவலகம் மட்டும் இயங்கி வருகிறது. பள்ளிக்கல்வித்துறை வரையறைகளின் படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகளை உள்ளடக்கி கல்வி மாவட்டம் அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் உட்பட அனைத்து தரப்பிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், பள்ளிக்கல்வித்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் திருப்பூருக்கு செல்ல வேண்டியிருந்ததால் அதிருப்தி நிலவியது. தாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு கல்வி மாவட்டம் அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டது. இதற்கு உடுமலை பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கல்வி மாவட்டம் பிரிக்கப்படாததால் ஏற்படும் நிர்வாக சிக்கல்கள், கல்வித்தரம் பாதிக்கப்படுவது மற்றும் உடுமலையை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து "தினமலரில்' நேற்று செய்தி வெளியானது. காரத்தொழுவில் நடந்த விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்விதுறை அமைச்சர் தங்கம்தென்னரசு, "தினமலர்' செய்தி அடிப்படையில், விரைவில் கல்வி மாவட்டம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் திட்டம் "தினமலர்' செய்தியால் அமைச்சர் கவனத்திற்கு சென்று விரைவில் தீர்வு கிடைக்க உள்ளதால் கல்வியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Blogger Templates Download As PDF
உடுமலை கல்வி மாவட்டம் அமைக்க ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு
0 comments
உடுமலை: இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும், உடுமலையை தலைமையிடமாக கொண்டு கல்வி மாவட்டம் அமைக்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளை உள்ளடக்கி பொள்ளாச்சி கல்வி மாவட்டம் செயல்பட்டு வந்தது. இந்த கல்வி மாவட்டத்தில் உடுமலை பகுதியிலேயே பெரும்பாலான தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அதிகளவில் செயல்பட்டு வந்தன.
உடுமலையில் ஐந்து உயர்நிலை பள்ளிகள், நான்கு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, ஏழு அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ளன. மெட்ரிக் பள்ளிகளில் இரண்டு உயர்நிலை ;ஏழு மேல்நிலைப்பள்ளியும் உள்ளன. மடத்துக்குளத்தில், மூன்று உயர்நிலைப்பள்ளி, இரண்டு மேல்நிலைப்பள்ளி, ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியும்; குடிமங்கலத்தில், இரண்டு உயர்நிலை, மூன்று மேல்நிலை, மூன்று மெட்ரிக் பள்ளிகளும் உள்ளன. பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு கல்வி மாவட்டம் செயல்பட்டு வந்ததால், நிர்வாக பணிகளில் எவ்வித சிரமமும் இல்லாமல் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு உடுமலை தாலுகா சேர்க்கப்பட்டது. புதிய மாவட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலகம் அமைக்கப்பட்டு, கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டார். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலிருந்த உடுமலை பள்ளிகள் பிரிக்கப்பட்டு, திருப்பூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன. பள்ளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு வருவாய் மாவட்டத்தில், இரண்டு கல்வி மாவட்ட அலுவலகங்கள் செயல்படுவது வழக்கம். ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் தற்போது வரை ஒரே கல்வி மாவட்ட அலுவலகம் மட்டும் இயங்கி வருகிறது. பள்ளிக்கல்விதுறை வரையறைகளின் படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகளை உள்ளடக்கி கல்விமாவட்டம் அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் உட்பட அனைத்து தரப்பிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி மாவட்டம் தாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு அமைக்க கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு உடுமலை பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. உடுமலையிலிருந்து 40 கி.மீ., தூரமுள்ள தாராபுரத்திற்கு சென்று வந்தால் ஒரு நாள் பள்ளி பணிகள் பாதிக்கப்படும். தேவனூர்புதூர், கரட்டுமடம் போன்ற பகுதியிலிருந்து 60 கி.மீ., செல்ல வேண்டும். இதனால், ஆசிரியர்கள், கல்வி பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி கல்விப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே,அதிகளவு கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய உடுமலை பகுதியை கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு, மற்ற துறைகளுக்கான அலுவலகம் அமைக்கப்பட்ட நிலையில், கல்வித்துறையில் மட்டும் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அலுவலக பணி மற்றும் ஆசிரியர்கள் கூட்டம் உட்பட அனைத்து பணிகளுக்கும் உடுமலையிலிருந்து ஆசிரியர்கள் திருப்பூருக்கு சென்று வருகின்றனர். மாணவர்களும் தேர்வு எழுத, விண்ணப்பங்கள் பெற திருப்பூருக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே உடுமலையை தலைமையிடாக கொண்டு கல்வி மாவட்டம் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காரத்தொழுவில், பள்ளி கட்டடத்திறப்பு விழாவில், பங்கேற்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடுமலை கல்வி மாவட்டமாக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவுகிறது.
Blogger Templates Download As PDF
உடுமலை ,பொள்ளாச்சியில் ஆருத்ரா தரிசனம்
0 comments
http://epaper.dinamalar.com/DM/COIMBATORE/2010/12/23/Article//162/23_12_2010_162_013.jpgBlogger Templates Download As PDF
உடுமலைபேட்டை போலீஸ் நிலையம்
0 comments
Mother Village Hamlets
1. UDUMAPET1.    SS COLONY
2. PERIYAKOTTAI1.    PALLAIVALASU
3. KANNAMANAICKANUR1.    PALAPPAMPATTI
4. KURALKUTTAI1.    JOTHIPALAYAM
5. BODIPATTI1.    KARUPATTIPALAYAM
6. R.VELUR1.    MARULPATTI
7. VADABOOTHANM1.    MALAYADNIGOUNDANUR
8. RAGALPAVI1.    DV PATINAM
9. POOLANKINAR1.    SENNIMALAIPALAYAM
10. GANAPATHIPALAYAM1.    வேஞ்சம்டை 
Blogger Templates Download As PDF
உடுமலையில் காட்சி பொருளான போக்குவரத்து "சிக்னல்': விபத்துகள் அதிகரிப்பு
0 comments
உடுமலை: உடுமலை நகர ரோடு சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து "சிக்னல்'கள் காட்சிப்பொருளாக மாறியுள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் நெரிசலும்,விபத்துகளும் அதிகரித்துள்ளன. உடுமலை நகரத்தில் பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு சந்திப்பு, தாராபுரம் ரோடு டிவைடர் மற்றும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இரண்டு பள்ளிகளின் அருகில் கடந்தாண்டு போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. தன்னார்வ அமைப்பினர் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் இந்த சிக்னல்கள் இயக்கப்பட்டு வந்தன. முக்கிய சந்திப்புகளில் சிக்னல்கள் இயங்கி வந்ததால் விபத்துகளும், நெரிசலும் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சிக்னல் செயல்பாடு நிறுத்தப்பட்டு அவை காட்சிப்பொருளாக மாறின. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் ஸ்டாண்ட் அருகில் போக்குவரத்தில் அதிக நெரிசல் ஏற்பட்டது. பழநி ரோட்டிலிருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட்டில் நுழையும் முன் வாரச்சந்தை ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் ரோட்டை கடந்து செல்ல முயன்றன. இதனால், அப்பகுதியில் குறுக்கும், நெடுக்குமாக வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தளி ரோடு சந்திப்பு பகுதியிலும் இதே பிரச்னை நிலவியது. பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு உடுமலை நகரில் அமைக்கப்பட்ட சிக்னல்கள் காட்சி பொருளானதால் வாகன ஓட்டிகள் வேதனையடைந்தனர். இந்நிலையில், போக்குவரத்து போலீசாரும் போதிய அளவு இல்லாததால் நகரத்தில் வாகன பயணம் அபாயமானதாக மாறியது. சிக்னல்களை மீண்டும் இயக்கி நெரிசலை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்," நகரில் செயல்படாமல் உள்ள சிக்னல்கள் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். போக்குவரத்து போலீசில் இருந்த காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது இரண்டு எஸ்.ஐ., மற்றும் நான்கு காவலர்கள் இந்த பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரோடு சந்திப்புகளிலும், பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிக்னல் இயங்க துவங்கியதும் நெரிசலும், விபத்துகளும் கட்டுப்படுத்தப்படும்' என்றனர்.Blogger Templates Download As PDF
விதி மீறி வைக்கப்பட்ட "பிளக்ஸ்' பேனர் அகற்றம்
0 comments
உடுமலை: விதிமுறைகளை மீறி உடுமலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த "பிளக்ஸ்' பேனர்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அமைப்பினருக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். பல பேனர்கள் நேற்று அகற்றப்பட்டன. உடுமலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகின்றன. இவ்வாறு வைக்கப்படும் பேனர்கள் விதிமுறைகளின்படி குறிப்பிட்ட நாளில் அகற்றப்படுவதில்லை. இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், பலத்த காற்று காலங்களில் ரோட்டில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகிறது. பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், திருப்பூர் ரோடு சந்திப்பு உட்பட பல இடங்களிலும், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம், கொமரலிங்கம் போன்ற பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற எஸ்.பி., அருண் உத்தரவிட்டார். உடுமலை போலீஸ் உட்கோட்டத்திலுள்ள உடுமலை, தளி, கொமரலிங்கம், குடிமங்கலம், மடத்துக்குளம் ஸ்டேஷன் கட்டுப்பாட்டு பகுதியில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணி நேற்று நடந்தது. சம்பந்தப்பட்ட அமைப்பினருக்கு பேனர்களை உடனடியாக அகற்ற போலீசார் உத்தரவிட்டனர். நேற்று நகரம் மற்றும் புறநகர் பகுதியில் பல பேனர்கள் அகற்றப்பட்டன. டி.எஸ்.பி., முருகானந்தம் கூறுகையில்," பேனர் வைக்கும் அமைப்பினர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். விழா நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்பும், விழா முடிந்தததும் உடனடியாக பேனர்களை அகற்ற வேண்டும் என அனுமதி பெறும் போது தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், பேனர்களை மர்மநபர்கள் கிழிப்பதால் பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே உட்கோட்ட பகுதியில் விதிமுறைகளை மீறிய பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன என்றார். "பேனர் அகற்றுவதில் பாரபட்சம்': உடுமலை போலீசார், "பிளக்ஸ்' பேனர்கள் அகற்றுவதில் பாரபட்சமாக செயல்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கொங்குநாடு முன்னேற்ற கழகத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கட்சியின் குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் கூறுகையில், பிற கட்சிகளின் பேனர்கள் கிழித்து தொங்கும் வரை அகற்றப்படுவதில்லை. போலீசாரும் ஆபத்தான இவ்வகை பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை. நேற்று கொங்குநாடு முன்னேற்ற கழக பேனர்களை மட்டும் விழா முடிந்து ஒரு நாள் அவகாசம் கூட தராமல் அகற்றியுள்ளனர். பிற கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் உடுமலை நகரம் மற்றும் பிற பகுதிகளில் வைக்கப்பட்ட பேனர்கள் பல அகற்றப்படாமல் உள்ளன. நிர்வாகிகள் தரப்பில் சில மணி நேரம் அவகாசம் கேட்டும் போலீசார் கண்டுகொள்ளாமல் பேனர்களை கிழித்து அகற்றியுள்ளனர். உடுமலை உட்கோட்ட போலீசாரின் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
Blogger Templates Download As PDF
பிரசன்ன விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
0 comments
உடுமலை:உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, நேற்று சிவகாமி சமேத சிதம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பின், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திரளான பக்தர்கள் இதை கண்டுகளித்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை 5.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகளும், காலை 6.00 மணிக்கு ஆருத்ரா தரினசம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும், 23ம் தேதி மாலை 6.30 மணிக்கு மகாபிஷேகமும் நடக்கிறது.Blogger Templates Download As PDF
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார ஓடைகளில் மணல் கொள்ளை: பாழாகும் விளைநிலங்கள்
0 comments
உடுமலை:மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்திலுள்ள நூற்றுக்கணக்கான ஓடைகளில் தேங்கும் மணல் தொடர்ந்து திருடப்படுவதால், நீர் வழித்தடங்கள் காணாமல் போய் வருகின்றன. நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதுடன் மழைக்காலங்களில் வெள்ளநீர் விளைநிலங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுகிறது. மேற்குதொடர்ச்சிமலையில் உடுமலை வனசரகத்திற்குட்பட்ட திருமூர்த்திமலை பகுதியிலிருந்து ஜல்லிபட்டி கொங்குரார்குட்டை பகுதி வரை அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான ஓடைகள் உள்ளன. மழைக்காலங்களில் மலையிலிருந்து சமவெளிப்பகுதிக்கு வழிந்தோடும் தண்ணீர் இந்த ஓடைகளின் வழியாக செல்கிறது. பருவமழைக்காலங்களில் இந்த ஓடைகளில் அதிகளவு தண்ணீர் செல்வதால் பல அடி உயரத்திற்கு மணல் பரப்பு உருவானது. மழை இல்லாத காலங்களிலும் ஓடைகளிலுள்ள மணல் பரப்பால் சுற்றுப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் மட்டத்திற்கு உதவியாக இருந்தது. இந்நிலையில், ஓடைகளில் மணல் பரப்பு அதிகம் தேங்கியதும், மணல் கடத்தல்காரர்களின் பார்வை மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தின் பக்கம் திரும்பியது. ஜல்லிபட்டி கொங்குரார் குட்டை பகுதியிலுள்ள ஓடைகளில் கடந்த சில மாதங்களாக மணல் திருட்டு அதிகரித்துள்ளது. கன்னிமார் ஓடை உட்பட பெயரிடப்படாத பல சிறிய ஓடைகளிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான லோடு மணல் மாட்டு வண்டிகளின் மூலம் கடத்தப்படுகிறது.
இந்த கடத்தல்காரர்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியாமல் மணலை கடத்த நூதன வழிகளை பின்பற்றுகின்றனர். ஓடையில் மணல் எடுக்க தனித்தனியாக இடத்தை பிரித்து வைத்து கொண்டு அதிகாலை 4.00 மணிக்கு மேல் சம்பவ இடத்திற்கு செல்கின்றனர்.  மாட்டு வண்டி முழுவதும் ஒரு மணி நேரத்தில் மணலை நிரப்பி, காலை 6.00 மணிக்குள் கொங்குரார் குட்டை, கோவிந்தாபுரம், சின்னகுமாரபாளையம் உட்பட மக்கள் குடியிருப்பு பகுதியை கடந்து சென்று விடுகின்றனர். பின்னர், மணலை ஓரிடத்தில் குவித்து வைத்து லோடு 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். அரசு வீட்டு வசதி திட்ட வீடுகள் அதிகளவு கட்டப்பட்டு வருவதால் தற்போது மணலுக்கு கிராக்கி நிலவுகிறது. இதனால், ஓடை மணலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு; கடத்தல்காரர்கள் கூடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கையாக அமைந்த நீர்வழித்தடங்களில் மணலை திருடி செல்வதால், மழைக்காலங்களில் மேற்குதொடர்ச்சி மலையிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஓடைகளிலிருந்து திசைமாறி விளைநிலங்களுக்குள் செல்கிறது. இதனால், மணற்பாங்கான மண் அமைந்துள்ள விளைநிலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடைகளில் மணல் அள்ள விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. வருவாய்துறை அதிகாரிகளிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது.  சிறிது காலம் தடைபட்டிருந்த மணல் கடத்தல் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உள்ளூர் வருவாய்துறை அதிகாரிகள் ஆசியை பெற்று விட்டு கடத்தல்காரர்கள் பணியை தொடர்வதாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவித்து வருகின்றனர். தொடரும் மணல் திருட்டால் ஓடைகள் காணாமல் போயுள்ளதால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் அதிகாலை நேரங்களில் திடீர் ரெய்டு நடத்தி மணல் கடத்தும் வண்டிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அழிந்து வரும் ஓடைகளை காப்பற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Download As PDF
உடுமலையில் பருத்தி அறுவடை துவக்கம்: விலை குறைவால் விவசாயிகள் அதிர்ச்சி
0 comments
உடுமலை : தொடர்மழையால் பருத்தி சாகுபடியில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தையில் பல்வேறு காரணங்களை கூறி செயற்கையாக கொள்முதல் விலை குறைக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில்,கோவை, தேனி, ராஜபாளையம், சேலம், கொங்கணாபுரம், நாமக்கல் பகுதியில் பருத்தி அதிகளவு பயிரிடப்படுகிறது. கடந்த சீசனில் பயிரிடப்பட்ட பருத்தி சாகுபடி தொடர்மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை பகுதியில் பி.ஏ.பி., பாசனத்திற்கு பரவலாக பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. மிக நீண்ட இழை பருத்தி ரகங்கள் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ளன. தொடர்மழையால் செடிகளில் நோய்த்தாக்குதல் மற்றும் காய் சப்பை உதிர்வது ஆகிய காரணங்களால் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது.
அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில், பருத்தி சந்தையில் அனைத்து ரக பருத்தியின் விலையும் சற்று குறைந்துள்ளது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, மிக நீண்ட இழை பருத்தி ரகம் கிலோ 42 ரூபாயிலிருந்து 45 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சீசனில் இந்த ரக பருத்தி கிலோ 48 ரூபாய் முதல் 52 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது. பருவநிலை ஒத்து போனதால் கடந்த சீசனில் ஏக்கருக்கு 12 முதல் 15 குவிண்டால் வரை விளைச்சல் இருந்தது.
தற்போது ஏக்கருக்கு 10 குவிண்டால் கூட விளைச்சல் கிடைக்காத நிலை உள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதலால் சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், நிலையான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறுவடை பணிகள் துவங்கியுள்ள போதிலும் கிராமங்களில் பருத்தி கொள்முதல் துவங்கவில்லை. செடிகளில் காய்கள் வெடித்துள்ள போதிலும் தற்போது நிலவும் பனிப்பொழிவு மற்றும் லேசான மழை காரணமாக பருத்தியில் ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால், பருத்தியின் தரம் பாதிக்கப்பட்டு விலை மேலும் குறையும். இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படும் அறுவடையில் மட்டுமே தரமான பருத்தி கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு, இந்த சீசனில் பருத்தி பயிரிட்ட விவசாயிகள் பல்வேறு சோதனைகளில் சிக்கி தவிக்கின்றனர்.
இந்நிலையில், பருத்தி நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை அடிப்படையாக கொண்டு செயற்கையாக கொள்முதல் விலையை குறைக்கும் பணியில் இடைதரகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பருத்தி மத்திய அரசின் பருத்தி கழகத்தின் மூலம் விவசாயிகளிடையே நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Download As PDF
அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
0 comments
உடுமலை: அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 15 நாட்கள் தண்ணீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், விவசாயிகள் தண்ணீர் தேவையில்லை என கூறியுள்ளதால் தண்ணீர் திறக்கும் அளவு  குறைக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை புதிய ஆயக்கட்டு பாசனத்தின் மூலம் உடுமலை, தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆண்டு தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால், அணை நீர் மட்டம் உயரவில்லை. இதனால், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.  புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் இருப்பை கணக்கிட்டு, அவ்வப்போது உயிர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை காரணமாக, கடந்த மாதம்  24ம் தேதி அணை நிரம்பியது.  தொடந்து கடந்த 24 நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு டிசம்பர் 15 முதல் 31 வரை 15 நாட்கள் தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர். ஆனால், பாசன பகுதிகளில் கன மழை காரணமாக நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், தேவை குறைவாக உள்ளதாலும் விவசாயிகள் தரப்பில் தற்போது தண்ணீர் தேவையில்லை என கூறி வருகின்றனர். ஆனால், கடை மடை விவசாயிகள் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  விவசாயிகளின் தேவை அடிப்படையில் தண்ணீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டு. பிரதான கால்வாயில் வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவை அடிப்படையில் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Download As PDF
உடுமலை,பொள்ளாச்சியில் வைகுண்ட ஏகாதசி விழா
0 comments
உடுமலை: உடுமலை நெல்லுக்கடை வீதி சவுந்திரராஜப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடக்கிறது. விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், அதிகாலை 5.30 மணிக்கு  சொர்க்க வாசல் திறப்பு,  காலை 11.30 மணிக்கு திருவீதி உலா புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு உற்சவர் ஏகாதசி அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
உடுமலை அருகே பெரியபட்டி ஸ்ரீதேவி, பூதேவி சீனிவாச அனுமந்தராய சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, சித்தி விநாயகர் கோவிலில்,  பெருமாளுக்கு அபிஷேக பூஜை, அலங்காரம், நைவேத்யம், தீபாராதனை உள்ளிட்ட  சிறப்பு பூஜைகளும், இரவு 9.00 மணிக்கு பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
 உடுமலை சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில், பிரசன்ன விநாயகர் கோவிலிலுள்ள  சவுரிராஜப்பெருமாள் சன்னதி, கொழுமம் கல்யாண வரதராஜப்பெருமாள் கோவில், கொமரலிங்கம் ஆத்தோரம் வெங்கட்ரமணசுவாமி கோவில், ஏரிப்பாளையம் வரதராஜப்பெருமாள் கோவில், கோட்டமங்கலம் வரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, அபிஷேகம், தீபாராதனை, சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
 பொள்ளாச்சி :  பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை (17ம் தேதி) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று, நாளை (17ம் தேதி) மற்றும் வரும் 18ம் தேதி ஆகிய மூன்று நாட்களுக்கு மூலஸ்தானத்திலுள்ள மூலவருக்கு முத்தங்கி சேவை நடக்கிறது. நாளை காலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும். இதில், காய், கனி, திரவிய பொருட்கள் கட்ட விரும்பும் பக்தர்கள், இன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கோவிலில் பொருட்களை வழங்கலாம்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர். அதேபோல், பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டிலுள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை அதிகாலை 4.30 மணிக்கு வாசுதேவ புண்ணியாவாசனமும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின், மகா அபிஷேகம் நடக்கிறது.
Download As PDF
காரில் கடத்த முயன்ற ரூ.1.52 லட்சம் சந்தனக்கட்டை பறிமுதல்
0 comments
உடுமலை : உடுமலை வனப்பகுதியிலிருந்து காரில் கடத்த முயன்ற 1.52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 38 சந்தன கட்டைகள் மற்றும் காரை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட குழிப்பட்டி, குருமலை, நாரைக்கல் சரகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான சந்தன மரங்கள் உள்ளன. இவற்றை வெட்டி கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு குழிப்பட்டி பகுதியிலிருந்து சந்தன மரங்கள் வெட்டி, திருமூர்த்தி மலை பகுதியிலிருந்து கடத்தப்பட உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனச்சரகர் சரவணன் மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரவு 11.30 மணிக்கு மாருதி 800 கார் திருமூர்த்திமலை பகுதியிலிருந்து வேகமாக வந்தது.
 இதனை நிறுத்த வனத்துறையினர் சோதனை செய்ய முயன்ற போது, கார் நிற்காமல் சென்றது. இதனையடுத்து, காரை வனத்துரையினர் ஜீப்பில் துரத்தினர். ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திய நிலையில், காண்டூர் கால்வாய் அருகே இருட்டில் காரை நிறுத்திவிட்டு, காரில் வந்தவர்கள் தப்பி ஓடினர். டி.என் 38 சி 9641 எண்ணுள்ளஅந்த காரை வனத்துறையினர் சோதனை செய்த போது, மூன்று சாக்கு பைகளில் சந்தன கட்டைகள் இருந்தன.  கார் மற்றும் சந்தன கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மூன்று சாக்குபைகளில் தரமான 38 கிலோ சந்தன கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு 1.52 லட்சம் ரூபாய். இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
Download As PDF
திருப்பூர் மாவட்டம் உதயமாகி ஓராண்டு நிறைவு
0 comments
திருப்பூர் மாவட்டம் உதயமாகி ஓராண்டு நிறைவு
கோவை மாவட்டமாக இருந்த உடுமலைப்பேட்டை திருப்பூர் மாவட்டமாகி ஓராண்டாகிறது. திருப்பூர் மாவட்டம் துவக்கப்பட்டு இன்று முதலாண்டு நிறைவு பெறுகிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பில், திருப்பூர் மாவட்டம் துவங்கிய நாள் விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடக்கிறது. தாராபுரம் ரோட்டில் உள்ள சரவண மகாலில், காலை 10.00 மணிக்கு நடக்கும் விழாவுக்கு, கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகிக்கிறார். அமைச்சர் சாமிநாதன், சாதனை மலர் மற்றும் தொலைபேசி கையேடு வெளியிடுகிறார். மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.மேயர் செல்வராஜ், எஸ்.பி., அருண், டி.ஆர்.ஓ., முரளிதரன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல வாரிய தலைவர் ராமலிங்கம், இணைத்தலைவர் செல்லமுத்து, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
ரூ.1.50 கோடி மதிப்பிலான நவீன எரிவாயு மயானம் 21ம் தேதி திறப்பு
உடுமலையில் 1.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன எரிவாயு மயானம் பணிகள் நிறைவடைந்துள்ளது. மார்ச் 21ம் தேதி திறக்கப்படுகிறது.உடுமலையில் பல்வேறு அமைப்புகள் இணைந்து “மக்கள் பேரவை’” செயல்படுகிறது. இப்பேரவையின் மூலம் நவீன எரிவாயு மயானம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, உடுமலை நகரம் மற்றும் கிராம பகுதி மக்களிடம் நிதி திரட்டி, 1.50 கோடி ரூபாய் செலவில் நவீன எரிவாயு மயானம் கட்டப் பட்டுள்ளது. இதற்கு “முக்தி” என பெயரிடப்பட்டுள்ளது.
சுற்றுப்புற சூழல் மாசுபடாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எரிவாயு மயானத்தில், இறுதி சடங்கு செய்யும் வகையில், பிரார்த்தனை மண்டபம், எரியூட்டு மையம், மொட்டையடித்து சடங்கு செய்வதற்கு தனி மண்டபம் உட்பட அனைத்து வசதிகளுடன் , அழகாக வடிமைக்கப்பட்டுள்ளது. மரம் மற்றும் தேங்காய் சிரட்டை மூலம், “பயோ காஸ்’ உற்பத்தி செய்து, உயர் வெப்பத்தில் சடலம் எரிக்கப்படுகிறது. வெளியேறும் புகையால் சுற்றுப்புறம் பாதிக்காமல் இருக்க, இயந்திரம் மற்றும் தண்ணீர் தொட்டிகள் வழியாக வாயு சுத்திகரிக்கப்பட்டு, 100 அடி உயரமுள்ள புகை போக்கி வழியாக வெண் புகை வெளியேற்றப்படுகிறது. இதன் திறப்பு விழா வரும் 21ம் தேதி நடக்கிறது.
திறப்பு விழாவிற்கு மக்கள் பேரவையின் தலைவர், தொழிலதிபர் கெங்குசாமி தலைமை வகிக்கிறார். நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் கலெக்டர் சமயமூர்த்தி, எஸ்.எஸ்.ஏ., ஆலோசகர் விஜயகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மக்கள் பேரவை நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:
நவீன எரிவாயு மயானத்திற்கு இந்திய மருத்துவ சங்கம், ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம் சார்பில் ஒன்பது லட்சம் செலவில் அமரர் ஊர்தியும் வழங்கப்படுகிறது. எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் ஏழு லட்சம் ரூபாய் செலவில், தனியாக ஒரு மண்டபம், தளம் அமைக்கப் பட்டுள்ளது. தினமும் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பதிவு செய்யப்படும். காலை 9.00 மணி முதல் 6.00 மணி வரை சடலம் எரியூட்டப்படும். பதிவு அடிப்படையில் சடலம் எரியூட்டப் படுகிறது.
ஒரு சடலம் எரிவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். தினமும் எட்டு சடலம் வரை எரிக்கலாம். பதிவு செய்தால், நவீன எரிவாயு மயானத்திலிருந்து வாகனம் மூலம் சடலம் எடுத்து வரப்படும். போக்குவரத்து மற்றும் எரியூட்டும் செலவாக ஒரு சடலத்திற்கு, 20 கி.மீ., வரை 1200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20 கி.மீ., க்கு மேல் இருந்தால், கி.மீ.,க்கு, 10 ரூபாய் வசூலிக்கப்படும். சடலம் எரியூட்டப்பட்டு, அஸ்தி எடுத்து வழங்கப்படும். குறைந்த செலவில், சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படாது. மேலும், மற்றொரு எரியூட்டும் அமைப்பு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் நிதி உதவி அளிக்க முன்வரவேண்டும்’ என்றனர்.
துணை தலைவர் முத்துகுமாரசாமி, நவீன எரிவாயு மயான அறக்கட்டளை தலைவர் டாக்டர் சிவசண்முகம், செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பாலசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
Download As PDF
உடுமலைப்பேட்டை
0 comments
Udumalpet is a town and a municipality in Tirupur district, Indian state of tamilnadu  
Pollachi to Udumalpet 20km distance. The name in the ancient days was "UDUMALAI" and due to its rural atmosphere, it was also named as Pettai. In latter period it was changed as "UDUMALAIPETTAI" in Tamil.
The city was previously under Coimbatore district but was moved under the newly formed Tirupur district in October 2008. The change was opposed by many of the residents but it was not reverted back. In short known as Udumalai, the city is surrounded by the high mountains of Western Ghats on three sides. This Municipal town has a population of about 60,000. Udumalpet is an industrial town with number of textile, paper and farming related industries established here. Famous landmark   and monuments in an around the town includes Thirumoorthy Hills,which has the Thirumurthi water reservoir that provides water supply to the town, Mariamman Temple, an old worshiping place in the town center and Amaravathi Reservoir, across Amaravathi River which provides irrigation to the agricultural lands around the town. Both Thirumoorthy Hills and Amaravathi Reservoir provide recreational activities such as boating, fishing and hiking and attract tourists from other parts of the state. Udumalpet lies between the famous temple town of Palani (35 km)and Pollachi (28 km)on the National Highway No.209. Udumalpet is also connected by a metre gauge railway line. Udumalpet assembly constituency is part of Pollachi.
Download As PDF
சட்டமேலவை தொகுதி வாக்காளர் பட்டியல் புதிதாக பெயர் சேர்க்க 1,579 பேர் விண்ணப்பம்
0 comments
உடுமலை : உடுமலை தாலுகாவில் சட்ட மேலவை தொகுதி வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே 1,691 பேர் உள்ள நிலையில், புதிதாக பெயர் சேர்க்க 1,579 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக சட்ட மேலவை மேற்கு மண்டல தொகுதிக்குட்பட்ட உடுமலை தாலுகா வாக்காளர் பட்டியல் நவம்பர் ம் தேதி வெளியிடப்பட்டது. பட்டதாரிகள் தொகுதி வாக்காளர் பட்டியலில் 1,388 பேரும், ஆசிரியர் தொகுதிக்கு 303 பேரும் உள்ளனர். உடுமலை நகர பகுதியிலுள்ளவர்களுக்கு ராஜேந்திரா ரோடு அரசு உயர் நிலைப்பள்ளியும், கிராம பகுதியிலுள்ளவர்களுக்கு கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியும் ஓட்டுச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி விண்ணப்பங்கள் குறைந்த நிலையில், கடந்த 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.  மேலும், கால நீடிப்பு செய்யப்பட்டு, நாளை விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, புதிதாக பட்டதாரிகள் தொகுதிக்கு 1,390 பேரும், ஆசிரியர் தொகுதிக்கு 189 பேரும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Download As PDF
உடுமலையில் புதிய குடிநீர் நிறுவனம் துவக்கம்
0 comments
உடுமலை : உடுமலை அருகே சபரி அக்வா பார்ம்ஸ் நிறுவனம் சார்பில், "காக்டஸ் பேக்கேஜூடு டிரிங்கிங் வாட்டர் நிறுவனம்' துவங்கப்பட்டுள்ளது. பல்லடத்தை தலைமையிடமாகக் கொண்டு, சபரி ஹேச்சரீஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சார்பு நிறுவனமான சபரி அக்வா பார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் "காக்டஸ் பேக்கேஜூடு டிரிங்கிங் வாட்டர் நிறுவனம்' உடுமலை அருகே துவக்கப்பட்டுள்ளது.  சபரி குரூப் ஆப் கம்பெனியின் நிர்வாகிகள் சுகுமார், ராகுல், வசந்தி ஆகியோர் கூறியதாவது: தமிழகத்திலேயே முதன்முறையாக அனைத்து விதமான உற்பத்தியும் தன்னிச்சையாக இயங்கும் வகையில், (ஆட்டோமெட்டிக் மெஷின்) ஐஎஸ்ஓ தரத்துடன் காக்டஸ் பேக்கேஜூடு டிரிங்கிங் வாட்டர் தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனம் தரத்தினையும் சுவையையும் நோக்கமாக கொண்டு உற்பத்தியினை துவக்கியுள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன், 20 லி., 10லி., 5 லி., 2 லி., 1 லி., 500 மி.லி,, 300 மி.லி,, 200 மி.லி., கொள்ளளவு கொண்ட பாட்டில்களில் தயாரிக்கப்படுகின்றன. இப்பகுதியில் தயாரிக்கப்படும் குடிநீர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட உள்ளது, என்றனர்
Download As PDF
திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மாற்றம்
0 comments
திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி. சிவசாமி எம்.பி. அப்பொறுப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டார்.  அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சரும், உடுமலைப்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், இப்போதைய மாவட்ட அவைத் தலைவருமான சி. சண்முகவேலு புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
Download As PDF
அதிமுக மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு
0 comments
உடுமலை:அதிமுகவின் திருப்பூர் மாவட்ட புதிய செயலாளர் சண்முகவேலுவுக்கு உடுமலையில் திங்கள்கிழமை மாலை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக் கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .திருப்பூர் மாவட்ட அதிமுக செயலாளராக உடுமலை எம்எல்ஏ சி.சண்முகவேலு கட்சியின் தலைமையால் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டார். பொறுப்பேற்றுக் கொண்ட சி.சண்முகவேலு திங்கள்கிழமை உடுமலை வந்தார். அவருக்கு அக் கட்சியின் பல்வேறு அமைப்புக்கள் சார்பில் உடுமலை நகர எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு சண்முகவேலு மாலை அணிவித்தார்.இதில் ஆயிரக் கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் சென்று அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் புதிய மாவட்ட செயலாளர் சி.சண்முகவேலுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Download As PDF
கல்லாபுரம்-அமராவதி அணை ரோடு பழுது பொதுமக்கள் அவதி
0 comments
உடுமலை: குண்டும், குழியுமாக உள்ள கல்லாபுரம்- அமராவதி அணை ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது: உடுமலை கல்லாபுரத்திலிருந்து அமராவதி அணை மற்றும் அமராவதி நகர் பகுதிக்கு பல்வேறு தேவைகளுக்காக இவ்வழித்தடத்திலேயே  சென்று வருகிறோம். இந்நிலையில், ரோட்டை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், குண்டும், குழியுமாக உருமாறியுள்ளது.  தற்போது பெய்த மழையினால் மேலும் ரோடு சேதமாகியுள்ளது. இதனால்,  ரோட்டில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். Download As PDF
உடுமலைக்கு முதல்கட்டமாக வந்த 34 ஆயிரம் இலவச வேஷ்டி சேலை
0 comments
உடுமலை: தமிழக அரசின் இலவச வேஷ்டி-சேலைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் உடுமலை தாலுகாவிற்கு முதல் கட்டமாக 34 ஆயிரம் இலவச வேஷ்டி- சேலைகள் வந்துள்ளன. தமிழக அரசு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேஷ்டி-சேலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இலவச வேஷ்டி-சேலை வழங்கும் பணிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு பட்டியல் அடிப்படையில், உடுமலை தாலுகாவிற்கு 69, 650 சேலைகள்; 68,992 வேஷ்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், முதல் கட்டமாக 16 ஆயிரம் சேலைகள் மற்றும் 18 ஆயிரம் வேஷ்டிகள் உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளன. முழுமையான அளவு வேஷ்டி-சேலைகள் வந்தவுடன், ரேஷன் கடைகளுக்கு அனுப்பிவைக்கப்படும். அரசு உத்தரவை தொடர்ந்து வினியோகம் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Download As PDF
உடுமலை-சின்னார் ரோடு மேம்பாடு பணி: வனத்துறை அனுமதி அளிக்க கோரிக்கை
0 comments
உடுமலை: வனத்துறை அனுமதி கிடைக்காததால், உடுமலை-சின்னார் ரோட்டில் மேம்பாட்டு பணிகள் பல ஆண்டுகளாக தடைபட்டு ஒதுக்கப்படும் நிதி பிற பணிகளுக்கு பயன்படுத்தப்படும் நிலை உள்ளது. உயிரிழப்புகளை குறைக்க மேம்பாட்டு பணிகளுக்கு வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலையிலிருந்து கேரளா மாநிலம் மூணாறுக்கு செல்லும் ரோடு இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரோடாக உள்ளது. இந்த ரோட்டில் உடுமலையிலிருந்து சின்னார் வரையுள்ள 28 கி.மீ., பகுதி நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள் ளது. ஒன்பதாறு செக்போஸ்ட்டிலிருந்து சின்னார் செக்போஸ்ட் வரை 20க்கும் அதிகமான கி.மீ., ரோடு வனத்துறை கட்டுப்பாட்டு பகுதி வழியாக செல்கிறது. இந்த ரோட்டில் சுற்றுலா பயணிகள் மற்றும் அம்மாநிலத்திற்கு காய்கறிகள் உட்பட பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் அதிகளவு செல்கின்றன.வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியில் பல இடங்களில் ரோடு படுமோசமான நிலையில் உள்ளது. குறுகிய பாலங்களும், ரோட்டோர பள்ளங்களும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும், விபத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக 19/2 கி.மீட்டரிலுள்ள "எஸ்' வளைவு பகுதியில் வாகனங்கள் எளிதில் திரும்ப முடியாமல் திணறும் நிலை உள்ளது.இப்பகுதியில் சரக்கு வாகனங்கள் விபத்திற்குள்ளாவதும், இருமாநிலங்களுக்கும் இடையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வந்தது. இந்நிலையில், வளைவு பகுதியை மேம்படுத்தி விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், பணிகளை மேற்கொள்ள வனத்துறை ஒப்புதல் அளிக்கவில்லை.இதனால், மாற்று ஏற்பாடாக வளைவு பகுதியில் தடுப்பு சுவருக்கு பதிலாக பேரிகார்டு போன்ற நீண்ட தகடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்தனர். பிற இடங்களில் காணப்படும் குறுகிய பாலங்கள், பள்ளங்களின் அருகில் தடுப்பு சுவர்கள், தொடர் பராமரிப்புபணிகள், குண்டும், குழியுமான இடங்களில் சிறப்பு மேம்பாடு ஆகிய திட்டங்களை செயல்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசு ஒப்புதலுக்கு அனுப்பினர்.  ரோட்டின் முக்கியத்துவம் கருதி அரசும் 70 லட்ச ரூபாய் வரை சின்னார் ரோடு மேம்பாட்டிற்காக ஒதுக்கியது. ஆனால், குறுகிய பாலங்களை விரிவுபடுத்தவும், தடுப்பு சுவர் அமைக்கவும் வனத்துறை அனுமதி நெடுஞ்சாலைத்துறையினருக்கு கிடைக்கவில்லை. வளைவு பகுதியை மேம்படுத்தவும் இதே நிலை தொடர்கிறது. தற்போது, பழுதடைந்துள்ள இரண்டு தடுப்பு சுவர்களை பராமரிக்க மட்டும் அனுமதி கிடைத்துள்ளதால் அப்பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ரோடு மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி வேறு பணிகளுக்கு ஆண்டுதோறும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
வனவிலங்குகள் பாதுகாப்பிற்காக வனச்சட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால், வன கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள ரோட்டை மேம்படுத்த அனுமதி கிடைப்பதில்லை. வன உயிரினங்களை காப்பதை போல் இந்த ரோட்டில் மனித உயிரிழப்புகளையும் தடுக்க மேம்பாட்டு பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Download As PDF
உடுமலையில் மூன்று நாளாக குடிநீர் நிறுத்தம்: பொதுமக்கள் அதிருப்தி
0 comments
உடுமலை : உடுமலை நகராட்சி பகுதிகளில் மூன்று நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.உடுமலை நகராட்சியிலுள்ள 33 வார்டுகளில் 70 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உடுமலை நகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இத்திட்டம் உள்ளது.உடுமலை நகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இக்குடிநீர் திட்டம் முறையாக பராமரிக்கப்படாததால், அடிக்கடி குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென மூன்று நாட்களாக உடுமலை நகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.உள்ளூர் குடிநீர் ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில், நகராட்சி நிர்வாகமும் முறையாக எந்த ஏற்பாடுகளும், முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென குடிநீர் வினியோகத்தை நிறுத்தியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குடிநீர் வராததால் விலைக்கு வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.நகராட்சி அலுவலகத்தில் இது குறித்து விசாரித்தாலும், எதற்காக குடிநீர் நிறுத்தப்பட்டது, எத்தனை நாட்களில் குடிநீர் வினியோகம் துவங்கும் என்பது குறித்து முறையாக பதில் அளிக்காமல் நகராட்சி அதிகாரிகள் மெத்தனபோக்கை கடைபிடித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.நகராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் வினியோகம் மேற்கொள்ளவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் குடிநீரை சேமித்து பயன்படுத்தும் வகையில், முன்னதாகவே அறிவிப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Download As PDF
திருப்பூர் மாவட்ட சுற்றுலா வரைபடம்
0 comments
Download As PDF
சைனிக் பள்ளி முதல்வர் ராஜஸ்தானுக்கு மாற்றம்
0 comments
உடுமலை: உடுமலை  அமராவதி நகர் சைனிக் பள்ளி முதல்வர் பதவி உயர்வு பெற்று ராஜஸ்தானிற்கு மாறுதல் பெற்று சென்றார். உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளி முதல்வராக  பணியாற்றிய கர்னல் சாமுவேல் பதவி உயர்வு பெற்று, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலுள்ள  ராணுவத்தின் தலைமையகம் 12வது பிரிவு மாறுதல் பெற்றுச் சென்றார்.  இப்பள்ளியில் மூன்றாண்டுகளாக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று மாறுதல் பெற்று சென்றதையடுத்து, தற்போது பள்ளியின் தலைமையாசிரியர் விங்கமாண்டர் ரவிக்குமார் கூடுதலாக பள்ளி முதல்வர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார். Download As PDF
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள்
0 comments
KALAIGNAR HEALTH INSURANCE SCHEME - STAR  HOSPITALS LIST
Sl No
Name Of the  STAR Hospitals
STD Code
Telephone
Cell Phone
1
D.S.K. Hospital, Tiruppur
0421
2421350
2422505
99528 21812
99440 88233
2
Lotus Eye Care Hospital, Tiruppur
0421
2346060
4346161
99449 72824
3
Revathi Medical Centre, Tiruppur
0421
4332211
4332200
98422 47997
4
Sir Kumaran Hospital, Tiruppur
0421
4330000
2478787
98422 01500
5
The Eye foundation, Tiruppur
0421
2232333
2232334
94433 17791
6
Balaji Surya Hospital, Dharapuram
04258
220385
220585
98422 20385
7
Muthusamy Nursing Home, Udumalpet
04252
224327
94425 23448
8
Priya Orthopaedic Centre, Udumalpet
04252
224726
225092
98431 29464
LIST OF OTHER HOSPITALS
Sl No Name Of the Hospital Contact No (0421)
1
A.G. Hospital 2702666
2
Balakumar Nursing Home 2721020
3
Chandar Nursing Home 2475022
4 D.S.K. Hospital 2421350
5 E.S.I. Hospital 2720200
6 Eswaran Poly clinic 2740560
7 Ganapathy Nursing Home 2422246
8 Kannan Nursing Home 2476888
9 Kiruthika Hospital 2746466
10 Dr. Kitchappan Hospital 2742466
11 N.S.K. Hospital 2713700
12 Priya Poly Clinic 2742466
13 Revathi Medical Centre 4332200,4332211
14 Roopa Nursing Home 2721405
15 S.R. Nursing Home 2720456
16 Sakthi Hospital 2702155
17 Sankara Hospital 2740471
18 Seetha Lakshmi Nursing 2476255
19 Sri Kumar Nursing Home 2745656
20 Sundaram Nursing Home 2422998
21 Tamilnadu Hospitals 2705042
22 Tiruppur Government Hospital 2421201
23 Tiruppur Medical Foundation 2702766
24 Uma Clinic 2712501
Blood Banks
1 Government Hospital 2421201
2 Eswaran Poly Clinic 2740560
3 Free Ambulance 2748900
Download As PDF
பார்த்தவர்கள்
பார்த்தவர்கள்
free counters free counters
Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket