make gif

உடுமலை, மடத்துக்குளம் கிராமங்களுக்கு புதிய எண்கள்: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2010,23:33 IST
உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள கிராமங்களுக்கு புதிய எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தின் ஒரு கோட்டமாக உடுமலை இயங்கி வருகிறது. உடுமலை தாலுகா , உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா என இரண்டாக பிரிக்கப்பட்டது. ஏற்கெனவே, ஒருங்கிணைந்த உடுமலை தாலுகாவில் இருந்த போது கிராமங்களுக்கு எண்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. தாலுகா பிரித்த நிலையிலும் பழைய கிராம எண்களே பயன்படுத்தப்பட்டு வந்தன.இந்நிலையில், இரண்டு தாலுகாவிலுள்ள கிராமங்களுக்கும் புதிய எண்கள் வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.உடுமலை தாலுகாவிலுள்ள தென்பூதி நத்தம் கிராமம் எண் 1 ஆகவும்,
சின்னவீரம்பட்டி 2, குறிஞ்சேரி 3, அந்தியூர் 4, பூலாங்கிணர் 5, வெனசபட்டி 6, கணபதிபாளையம் 7, உடுமலை 8, பெரியகோட்டை 9, கணக்கம்பாளையம் 10. ராகல்பாவி 11, ரா.வேலூர் 12, வடபூதிநத்தம் 13, போடிபட்டி 14, கண்ணமநாயக்கனூர் 15, தளி 16, ஜல்லிபட்டி 17, லிங்கமாவூர் 18, வெங்கிட்டாபுரம் 19, சின்னகுமாரபாளையம் 20, குறிச்சிக்கோட்டை 21, பள்ளபாளையம் 22, போகிகவுண்டன்தாசர்பட்டி 23, குரல்குட்டை 24, ஆலாம்பாளையம் 25, குருவப்பநாயக்கனூர் 26, மானுப்பட்டி 27, தும்பலப்பட்டி 28, ஆண்டியகவுண்டனூர் 29, எலையமுத்தூர் 30, கல்லாபுரம் 31, சின்னபாப்பனூத்து 32, பெரியபாப்பனூத்து 33, உடுக்கம்பாளையம் 34, புங்கமுத்தூர் 35, செல்லப்பம்பாளையம் 36, தேவனூர் புதூர் 37, ராவணாபுரம் 38, வலையபாளையம் 39, எரிசனம்பட்டி 40, கொடுங்கியம் 41, தின்னப்பட்டி 42, பெரியவாளவாடி 43, சின்னவாளவாடி 44, சர்க்கார் புதூர் 45, ரெட்டிபாளையம் 46, ஜிலேபிநாயக்கன்பாளையம் 47, அரசூர் 48, கிருஷ்ணாபுரம் 49, தீபாலபட்டி 50, மொடக்குப்பட்டி 51 என புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள சங்கராமநல்லூர் கிராமத்திற்கு எண் 1ம், கொழுமம் 2, கொமரலிங்கம் மேற்கு 3, மெட்ராத்தி 4, காரத்தொழுவு 5, கடத்தூர் 6, கணியூர் 7, ஜோத்தம்பட்டி 8, துங்காவி 9, தாந்தோணி 10, வேடபட்டி 11, மைவாடி 12, சோழமாதேவி 13, சர்க்கார் கண்ணாடிபுத்தூர் 14, அக்ராகாரம் கண்ணாடிபுத்தூர் 15, பாப்பான்குளம் 16, கொமரலிங்கம் கிழக்கு 17, சங்கராமநல்லூர் வடக்கு 18, பூளவாடி 19, ஆத்துக்கிணத்துபட்டி 20, கொண்டம்பட்டி 21, பெரியபட்டி 22, குப்பம்பட்டிபாளையம் 23, ஆமந்தகடவு 24, வடுகபாளையம் 25, குடிமங்கலம் 26, கோட்டமங்கலம் 27, பொன்னேரி 28, புக்குளம் 29, மூங்கில்தொழுவு 30, கொசவம்பாளையம் 31, வாகத்தொழுவு 32, வீதம்பட்டி 33, அணிக்கடவு 34, விருகல்பட்டி 35, புதுப்பாளையம் 36, கொங்கல்நகரம் 37, இலுப்பநகரம் 38, சோமவாரபட்டி 39, தொட்டம்பட்டி 40, பண்ணைக்கிணர் 41, முக்கூடு ஜல்லிபட்டி 42 என கிராம எண்கள் மாற்றியமைத்து, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
Blogger Templates
Download As PDFPrint this post

0 comments: (+add yours?)

Post a Comment

பார்த்தவர்கள்

பார்த்தவர்கள்

free counters free counters
Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket