உடுமலை : உடுமலை வனப்பகுதியிலிருந்து காரில் கடத்த முயன்ற 1.52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 38 சந்தன கட்டைகள் மற்றும் காரை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட குழிப்பட்டி, குருமலை, நாரைக்கல் சரகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான சந்தன மரங்கள் உள்ளன. இவற்றை வெட்டி கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு குழிப்பட்டி பகுதியிலிருந்து சந்தன மரங்கள் வெட்டி, திருமூர்த்தி மலை பகுதியிலிருந்து கடத்தப்பட உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனச்சரகர் சரவணன் மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரவு 11.30 மணிக்கு மாருதி 800 கார் திருமூர்த்திமலை பகுதியிலிருந்து வேகமாக வந்தது.
இதனை நிறுத்த வனத்துறையினர் சோதனை செய்ய முயன்ற போது, கார் நிற்காமல் சென்றது. இதனையடுத்து, காரை வனத்துரையினர் ஜீப்பில் துரத்தினர். ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திய நிலையில், காண்டூர் கால்வாய் அருகே இருட்டில் காரை நிறுத்திவிட்டு, காரில் வந்தவர்கள் தப்பி ஓடினர். டி.என் 38 சி 9641 எண்ணுள்ளஅந்த காரை வனத்துறையினர் சோதனை செய்த போது, மூன்று சாக்கு பைகளில் சந்தன கட்டைகள் இருந்தன. கார் மற்றும் சந்தன கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மூன்று சாக்குபைகளில் தரமான 38 கிலோ சந்தன கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு 1.52 லட்சம் ரூபாய். இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
Download As PDFPrint this post

0 comments: (+add yours?)
Post a Comment