உடுமலை:அதிமுகவின் திருப்பூர் மாவட்ட புதிய செயலாளர் சண்முகவேலுவுக்கு உடுமலையில் திங்கள்கிழமை மாலை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக் கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .திருப்பூர் மாவட்ட அதிமுக செயலாளராக உடுமலை எம்எல்ஏ சி.சண்முகவேலு கட்சியின் தலைமையால் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டார். பொறுப்பேற்றுக் கொண்ட சி.சண்முகவேலு திங்கள்கிழமை உடுமலை வந்தார். அவருக்கு அக் கட்சியின் பல்வேறு அமைப்புக்கள் சார்பில் உடுமலை நகர எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு சண்முகவேலு மாலை அணிவித்தார்.இதில் ஆயிரக் கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் சென்று அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் புதிய மாவட்ட செயலாளர் சி.சண்முகவேலுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Download As PDFPrint this post
0 comments: (+add yours?)
Post a Comment