உடுமலை: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, உடுமலை தாலுகாவும் அதில் சேர்க்கப்பட்டது. புதிய மாவட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலகம் அமைக்கப்பட்டு, கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டார். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலிருந்த உடுமலை பள்ளிகள் பிரிக்கப்பட்டு, திருப்பூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன. பள்ளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு வருவாய் மாவட்டத்தில், இரண்டு கல்வி மாவட்ட அலுவலகங்கள் செயல்படுவது வழக்கம். ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் தற்போது வரை ஒரே கல்வி மாவட்ட அலுவலகம் மட்டும் இயங்கி வருகிறது. பள்ளிக்கல்வித்துறை வரையறைகளின் படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகளை உள்ளடக்கி கல்வி மாவட்டம் அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் உட்பட அனைத்து தரப்பிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், பள்ளிக்கல்வித்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் திருப்பூருக்கு செல்ல வேண்டியிருந்ததால் அதிருப்தி நிலவியது. தாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு கல்வி மாவட்டம் அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டது. இதற்கு உடுமலை பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கல்வி மாவட்டம் பிரிக்கப்படாததால் ஏற்படும் நிர்வாக சிக்கல்கள், கல்வித்தரம் பாதிக்கப்படுவது மற்றும் உடுமலையை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து "தினமலரில்' நேற்று செய்தி வெளியானது. காரத்தொழுவில் நடந்த விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்விதுறை அமைச்சர் தங்கம்தென்னரசு, "தினமலர்' செய்தி அடிப்படையில், விரைவில் கல்வி மாவட்டம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் திட்டம் "தினமலர்' செய்தியால் அமைச்சர் கவனத்திற்கு சென்று விரைவில் தீர்வு கிடைக்க உள்ளதால் கல்வியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Download As PDFPrint this post
EARN MONEY WITHOUT INVESTMENT
"விரைவில் உடுமலை கல்வி மாவட்டம்'
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: (+add yours?)
Post a Comment