make gif

உடுமலை சைனிக் பள்ளியில் சேர விருப்பமா?

http://www.sainikschoolamaravathinagar.edu.in/images/50th%20year%20type%2001.jpg
http://www.exam-results.com/schoolsinindia/sainikentrance.jpgஉடுமலை: உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் பெறுவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கும், டிசம்பர் 10ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில், 2011-2012ம் கல்வியாண்டில் 6 மற்றும் 9ம் வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 2011, ஜன., 2ம் தேதி நடக்கிறது. 2011ம் ஆண்டு ஜூலை 1ம் தேதியன்று 10 வயது முடிந்து 11 வயது முடியாமல் இருக்கும் மாணவர்கள் மட்டுமே 6ம் வகுப்பில் சேர முடியும்.2011ம் ஆண்டு ஜூலை 1ம் தேதியன்று 13வயது முடிந்து, 14வயது முடியாமலும் இருந்து, அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளியில் 8ம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டுமே 9ம் வகுப்பில் சேரத்தகுதி பெறுகின்றனர். சேர்க்கை விண்ணப்பங்கள் பள்ளியில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.விளக்க குறிப்பேடும், விண்ணப்ப படிவமும் பெற விரும்புவர்களில்,பொதுப்பிரிவு மற்றும் படைத்துறையினை சேர்ந்தவர்கள் 550 ரூபாய்க்கும், தாழ்த்தப்பட்ட இனத்தவர் மற்றும் பழங்குடி வகுப்பினர் 400 ரூபாய்க்கும் அமராவதி நகர் ஸ்டேட் வங்கியில் (கிளை எண் 2191) பெறத்தக்க வகையில், "முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர்' என்ற பெயரில் வரைவோலை (டிடி) எடுத்து அனுப்ப வேண்டும்.வரைவோலையுடன் 25 செ.மீ., து 20 செ.மீ., சுய விலாசமிட்ட உறை ஒன்றும் இணைத்து அனுப்புதல் வேண்டும். எந்த வகுப்பிற்கு அனுமதிக்கப்பட வேண்டும், எந்தப்பிரிவினை சேர்ந்தவர்கள் என்பது தெளிவாக குறிப்பிட வேண்டும்.www.sainikschoolamaravathinagar.edu.in என்ற அமராவதி நகர் சைனிக் பள்ளி இணையதளத்திலும் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டால், விண்ணப்ப படிவத் தொகையை பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தோடு சேர்த்து கட்ட வேண்டும். 6ம் வகுப்பில் சேர விரும்புவோர் நுழைவுத்தேர்வு எழுத விரும்பும் மொழியை குறிப்பிட வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர்-642102, உடுமலை வட்டம், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விளக்க குறிப்பேடு மற்றும் விண்ணப்ப படிவமும் பெறுவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இப்பள்ளியில் டிசம்பர் 10க்குள் வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04252-256246 ; 256296 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.இப்பள்ளிக்கு தனியார் பயிற்சி மையங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. தேர்வுத்தகுதி மற்றும் மருத்துவ சோதனை அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.2010-2011ம் கல்வியாண்டு முதல் பெற்றோர் மாத வருமான அடிப்படையில் கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் 15 ஆயிரம் ரூபாய் வரை பாதுகாப்புத்துறை மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தகவலை சைனிக் பள்ளி முதல்வர் தெரிவித்தார்.
Download As PDFPrint this post

0 comments: (+add yours?)

Post a Comment

பார்த்தவர்கள்

பார்த்தவர்கள்

free counters free counters
Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket