உடுமலை: குண்டும், குழியுமாக உள்ள கல்லாபுரம்- அமராவதி அணை ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது: உடுமலை கல்லாபுரத்திலிருந்து அமராவதி அணை மற்றும் அமராவதி நகர் பகுதிக்கு பல்வேறு தேவைகளுக்காக இவ்வழித்தடத்திலேயே சென்று வருகிறோம். இந்நிலையில், ரோட்டை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், குண்டும், குழியுமாக உருமாறியுள்ளது. தற்போது பெய்த மழையினால் மேலும் ரோடு சேதமாகியுள்ளது. இதனால், ரோட்டில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். Download As PDFPrint this post
0 comments: (+add yours?)
Post a Comment