make gif

அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

உடுமலை: அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 15 நாட்கள் தண்ணீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், விவசாயிகள் தண்ணீர் தேவையில்லை என கூறியுள்ளதால் தண்ணீர் திறக்கும் அளவு  குறைக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை புதிய ஆயக்கட்டு பாசனத்தின் மூலம் உடுமலை, தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆண்டு தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால், அணை நீர் மட்டம் உயரவில்லை. இதனால், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.  புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் இருப்பை கணக்கிட்டு, அவ்வப்போது உயிர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை காரணமாக, கடந்த மாதம்  24ம் தேதி அணை நிரம்பியது.  தொடந்து கடந்த 24 நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு டிசம்பர் 15 முதல் 31 வரை 15 நாட்கள் தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர். ஆனால், பாசன பகுதிகளில் கன மழை காரணமாக நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், தேவை குறைவாக உள்ளதாலும் விவசாயிகள் தரப்பில் தற்போது தண்ணீர் தேவையில்லை என கூறி வருகின்றனர். ஆனால், கடை மடை விவசாயிகள் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  விவசாயிகளின் தேவை அடிப்படையில் தண்ணீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டு. பிரதான கால்வாயில் வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவை அடிப்படையில் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Download As PDFPrint this post

0 comments: (+add yours?)

Post a Comment

பார்த்தவர்கள்

பார்த்தவர்கள்

free counters free counters
Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket