make gif

உடுமலையில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க கோரிக்கை

உடுமலை: உடுமலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளையின் பேரவை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒரு நபர் குழுவிலுள்ள பல்வேறு குறைபாடுகள் சரி செய்ய வேண்டும். மத்திய அரசு போல மாநில அரசின் மருத்துவப்படி, கல்வி உதவி, வீட்டு வாடகைபடி உள்ளிட்ட சலுகைகளை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் அழைத்து பேசி நிறைவேற்ற வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, மக்கள் நலப்பணியாளர், கிராம ஊழியர்கள், ஊர்புற நூலகர், கதர்வாரிய ஊழியர், ஊராட்சி உதவியாளர் மற்றும் அரசு கலைக்கல்லூரி விரிவுரையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.  கிராம செவிலியர்களுக்கு கால முறை அடிப்படையில் சம்பள நிலுவைத்தொகை உடனடியாக வழங்க வேண்டும்.  சாலைப்பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 41 மாத பணி நீக்கம் பணிக்காலம் உள்ளிட்ட கோரிக்கைகளை சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி வரைமுறைப்படுத்த வேண்டும். உடுமலை தாலுகாவிற்குட்பட்ட  அனைத்து அலுவலகங்களிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உடுமலையில் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். மடத்துக்குளம் தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கட்டடம்  கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. Download As PDFPrint this post

0 comments: (+add yours?)

Post a Comment

பார்த்தவர்கள்

பார்த்தவர்கள்

free counters free counters
Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket