make gif

உடுமலையில் திருக்கார்த்திகை தீப தரிசன விழா

http://a10.idata.over-blog.com/500x375/1/96/91/82/dieu/deepam-002.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEGZgEyWB7ijgRzv4jPoa9oqKYxTvs5rpGalaUXg3SyzQmnEGpncACx7ojLm0lCGBb48Mt3RleeQuMTiShV0mBa3dTlEW8PzJmhBJQK241J8dlkxusyEXDT0rts4HY1V1OSw6zsgnQpzU/s1600/Karthigai-Deepam-Festival-Celebration.jpg 




உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், திருக்கார்த்திகை தீபதரிசன விழா நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், திருக்கார்த்திகை தீபதரிசன விழாவையொட்டி, காலை 8.00மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன.   மாலை 6.00 மணிக்கு சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து  இரவு 7.00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. உடுமலை மாரியம்மன் கோவிலில், பவுர்ணமி மற்றும் திருக்கார்த்திகை தீப தரிசன விழா நடந்தது. மாலை 6.00 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. மாலை 6.15 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்யாகவாசன பூஜைகளும், இரவு 7.00 மணிக்கு கார்த்திகை தீப ஆவாகனம், சகஸ்ர தீப தரிசனம், சொக்கப்பனை ஏற்றுதல், கார்த்திகை தீபஸ்தாபனம் உள்ளிட்ட பூஜைகளும் நடந்தன. இரவு 8.00 மணிக்கு உபசாரம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதுபோன்று, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், திருக்கார்த்திகை தீப தரிசன விழா நடந்தது. மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியில் கார்த்திகை தீப திருவிழா  நடந்தது. காரத்தொழுவு அழகு நாச்சி அம்மன் கோவில், சிவன் கோவில், பெருமாள் கோவில்,கடத்தூர் அர்ச்சுனேஸ்வர் கோவில், கொழுமம் சுற்று கோவில், பாப்பான்குளம் முருகன் கேவில்  உள்ளிட்ட மடத்துக்குளம் பகுதி ஊர்களிலுள்ள கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. வழிபாட்டில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். Download As PDFPrint this post

1 comments: (+add yours?)

kumarprinters said...

Hai Boobal sir, congrats you are doing good work. by Kumarprintersudumalai@gmail.com

Post a Comment

பார்த்தவர்கள்

பார்த்தவர்கள்

free counters free counters
Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket