உடுமலையில் திங்கள்கிழமை மாலை பள்ளி மாணவியை கடத்த முயற்சி நடந்ததுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி கூறப் படுவதாவது:
உடுமலை, தளி சாலையில் அமைந்துள்ள பாரதியார் நினைவு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி அனிதா (11) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாலை 4.15 மணிக்கு பள்ளி முடிந்தவுடன் வீடு திரும்புவதற்காக காந்தி சவுக் பகுதியில் நடந்துவந்து கொண்டிருந்தார். இவருடன் 5 மாணவிகளும் உடன் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு வெள்ளை நிறக் காரில் அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் திடீரென மாணவி அனிதாவை காருக்குள் இழுத்து போட்டுக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர். தளி சாலை வழியாகச் சென்ற அந்தக் காரில் 2 முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நபர்கள் உனது தந்தை என்ன வேலை செய்கிறார் என்று விசாரித்தபோது எனது தந்தை ஒரு லாரி டிரைவர் என்று மாணவி அனிதா கூறியுள்ளார். இதைக் கேட்ட மர்ம நபர்கள் குட்டைப் பகுதியில் உள்ள காந்தி சிலை அருகே அனிதாவை கீழே தள்ளி விட்டுள்ளனர்.
அங்கிருந்த மக்கள் மாணவி அனிதாவை பத்திரமாக அவரது வீட்டில் கொண்டுசென்று சேர்த்துள்ளனர். இது குறித்து உடுமலை போலீஸôர் விசாரிக்கின்றனர்.
உடுமலை நேதாஜி மைதானத்தில் விளையாடிவிட்டு வீடு திரும்பிய 8ம் வகுப்பு மாணவன் ஸ்ரீதரை மர்ம நபர்கள் கடத்தி விடுவித்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் உடுமலையில் திங்கள்கிழமை மாலை மாணவி கடத்தல் சம்பவம் நடந்துள்ளது பெற்றோரை பீதி அடையச் செய்துள்ளது.
Download As PDFPrint this post
EARN MONEY WITHOUT INVESTMENT
உடுமலையில் மாணவியைக் கடத்த முயற்சி: பெற்றோர் பீதி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: (+add yours?)
Post a Comment