EARN MONEY WITHOUT INVESTMENT
85 அடியைத் தாண்டியது அமராவதி அணை நீர்மட்டம்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக 90 அடி உயரமுள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியுள்ளது. ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.உடுமலையை அடுத்து அமைந்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. திருப்பூர், ஈரோடு, கரூர் என மூன்று மாவட்டங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் இந்த அணையை நம்பியே உள்ளன. மேலும் நூற்றுக் கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்த ஆண்டு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் பழைய, புதிய ஆயக் கட்டு நிலங்களுக்கு தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் அணையின் நீர் இருப்பைப் பொருத்து, நிலைப் பயிர்களான தென்னை, கரும்பு ஆகியவற்றைக் காப்பாற்ற அவ்வப்போது உயிர் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக பெய்துவரும் பருவ மழையால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக, சின்னாறு, தேனாறு, பாம்பாறு போன்ற அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி 77 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இரவு 85 அடியைத் தாண்டியது. திங்கள்கிழமை மாலை அணைக்கு 4 ஆயிரம் கனஅடி உள்வரத்து கானப்பட்டது. இதனால் அணை ஓரிரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து பொதுப்பணித் துறையினர் கூறுகையில், "நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அமராவதியின் துணை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தி வருகிறோம்' என்றனர
Download As PDFPrint this post
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: (+add yours?)
Post a Comment