skip to main (ir a principal) | skip to sidebar (ir al sidebar)

UDUMALAIPETTAI(உடுமலைப்பேட்டை)

TwitterTwitterFacebookFacebookFlickrFlickrRSSRSS

Pages

  • Home
  • உடுமலைபேட்டை
  • உடுமலை நாராயணகவி
  • links
make gif

EARN MONEY WITHOUT INVESTMENT

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

உடுமலையில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க கோரிக்கை

பூபாலன்(BOOBALAN) 0 comments

உடுமலை: உடுமலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளையின் பேரவை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒரு நபர் குழுவிலுள்ள பல்வேறு குறைபாடுகள் சரி செய்ய வேண்டும். மத்திய அரசு போல மாநில அரசின் மருத்துவப்படி, கல்வி உதவி, வீட்டு வாடகைபடி உள்ளிட்ட சலுகைகளை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் அழைத்து பேசி நிறைவேற்ற வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, மக்கள் நலப்பணியாளர், கிராம ஊழியர்கள், ஊர்புற நூலகர், கதர்வாரிய ஊழியர், ஊராட்சி உதவியாளர் மற்றும் அரசு கலைக்கல்லூரி விரிவுரையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.  கிராம செவிலியர்களுக்கு கால முறை அடிப்படையில் சம்பள நிலுவைத்தொகை உடனடியாக வழங்க வேண்டும்.  சாலைப்பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 41 மாத பணி நீக்கம் பணிக்காலம் உள்ளிட்ட கோரிக்கைகளை சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி வரைமுறைப்படுத்த வேண்டும். உடுமலை தாலுகாவிற்குட்பட்ட  அனைத்து அலுவலகங்களிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உடுமலையில் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். மடத்துக்குளம் தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கட்டடம்  கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. Download As PDF

அமராவதி அணை நிரம்பியது வெள்ள அபாய எச்சரிக்கை

பூபாலன்(BOOBALAN) 0 comments

உடுமலை: தொடர் மழையால் அமராவதி அணை நேற்று நிரம்பியது. இதனால், திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அமராவதி ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.  உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மொத்த கொள்ளளவு 90 அடி இதில், நவ., 1 ல் 48.95 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் தொடர் மழை காரணமாக கடந்த பத்து நாட்களாக வேகமாக உயர்ந்தது. கடந்த 18 ம் தேதி முதல் அணையின் நீர் வரத்து விநாடிக்கு ஆயிரம் கன அடியை தாண்டியது. கடந்த 21 ம் தேதி அணை பகுதியில் 130 மி.மீ., மழை பதிவான நிலையில் நீர் வரத்து ஆறுகளான பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர் வரத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரித்து, ஒரே நாளில் நான்கு அடி நீர் மட்டம் உயர்ந்தது. பாசனப்பகுதிகளிலும் மழைப்பொழிவு இருந்ததால் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அணை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 24 ம் தேதி ஒரே நாளில் நீர் மட்டம் ஐந்து அடி உயர்ந்தது.  நேற்று காலை அணைக்கு 3,618 கன அடி நீர் வரத்து இருந்தது. அணை பகுதியில் 16 மி.மீ., மழை அளவு பதிவானது. அணையின் நீர் மட்டம் 87 அடியாக உயர்ந்தது. அமராவதி அணை கடந்தாண்டு நவ., 16 ம் தேதி நிரம்பியது. ஒராண்டுக்கு பிறகு அணை நேற்று நிரம்பிய நிலையில் வழியோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Download As PDF

85 அடியைத் தாண்டியது அமராவதி அணை நீர்மட்டம்

பூபாலன்(BOOBALAN) 0 comments

Last Updated :
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக 90 அடி உயரமுள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியுள்ளது. ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.உடுமலையை அடுத்து அமைந்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. திருப்பூர், ஈரோடு, கரூர் என மூன்று மாவட்டங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் இந்த அணையை நம்பியே உள்ளன. மேலும் நூற்றுக் கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்த ஆண்டு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் பழைய, புதிய ஆயக் கட்டு நிலங்களுக்கு தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் அணையின் நீர் இருப்பைப் பொருத்து, நிலைப் பயிர்களான தென்னை, கரும்பு ஆகியவற்றைக் காப்பாற்ற அவ்வப்போது உயிர் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.  கடந்த சில நாட்களாக பெய்துவரும் பருவ மழையால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக, சின்னாறு, தேனாறு, பாம்பாறு போன்ற அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி 77 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இரவு 85 அடியைத் தாண்டியது. திங்கள்கிழமை மாலை அணைக்கு 4 ஆயிரம் கனஅடி உள்வரத்து கானப்பட்டது. இதனால் அணை ஓரிரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து பொதுப்பணித் துறையினர் கூறுகையில், "நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அமராவதியின் துணை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தி வருகிறோம்' என்றனர Download As PDF

உடுமலையில் மாணவியைக் கடத்த முயற்சி: பெற்றோர் பீதி

பூபாலன்(BOOBALAN) 0 comments

உடுமலையில் திங்கள்கிழமை மாலை பள்ளி மாணவியை கடத்த முயற்சி நடந்ததுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி கூறப் படுவதாவது:


உடுமலை, தளி சாலையில் அமைந்துள்ள பாரதியார் நினைவு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி அனிதா (11) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாலை 4.15 மணிக்கு பள்ளி முடிந்தவுடன் வீடு திரும்புவதற்காக காந்தி சவுக் பகுதியில் நடந்துவந்து கொண்டிருந்தார். இவருடன் 5 மாணவிகளும் உடன் வந்து கொண்டிருந்தனர்.


அப்போது ஒரு வெள்ளை நிறக் காரில் அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் திடீரென மாணவி அனிதாவை காருக்குள் இழுத்து போட்டுக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர். தளி சாலை வழியாகச் சென்ற அந்தக் காரில் 2 முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நபர்கள் உனது தந்தை என்ன வேலை செய்கிறார் என்று விசாரித்தபோது எனது தந்தை ஒரு லாரி டிரைவர் என்று மாணவி அனிதா கூறியுள்ளார். இதைக் கேட்ட மர்ம நபர்கள் குட்டைப் பகுதியில் உள்ள காந்தி சிலை அருகே அனிதாவை கீழே தள்ளி விட்டுள்ளனர்.


அங்கிருந்த மக்கள் மாணவி அனிதாவை பத்திரமாக அவரது வீட்டில் கொண்டுசென்று சேர்த்துள்ளனர். இது குறித்து உடுமலை போலீஸôர் விசாரிக்கின்றனர்.


உடுமலை நேதாஜி மைதானத்தில் விளையாடிவிட்டு வீடு திரும்பிய 8ம் வகுப்பு மாணவன் ஸ்ரீதரை மர்ம நபர்கள் கடத்தி விடுவித்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் உடுமலையில் திங்கள்கிழமை மாலை மாணவி கடத்தல் சம்பவம் நடந்துள்ளது பெற்றோரை பீதி அடையச் செய்துள்ளது. Download As PDF

உடுமலை அருகே சிறுவனை வேனில் கடத்திய கும்பல், கிணற்றில் வீசி தப்பியோட்டம்

பூபாலன்(BOOBALAN) 0 comments




உடுமலை : உடுமலை அருகே சிறுவனை கடத்திய மர்ம கும்பல், அவனை கிணற்றில் வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். உடுமலை முக்கோணம் ஜெ.ஜெ., நகர் அருகேயுள்ள கிணற்றில் இருந்து நேற்று மாலை கூக்குரல் சத்தம் கேட்டது. அந்த வழியாக சென்ற சிலர், சத்தம் வந்த கிணற்றை எட்டிப்பார்த்தனர். அங்கு சிறுவன் ஒருவன், கிணற்றில் இருந்த கயிறை பிடித்தபடி தொங்கிக்கொண்டிருந்தான்.


உடுமலை தங்கம்மாள் ஓடை நெல்லுக்கடை வீதியை சேர்ந்த கோவிந்தராஜ், கனகவள்ளி தம்பதியின் மகனான ஸ்ரீதர் (13) என்ற அந்த சிறுவன், தன்னை மீட்ட பொதுமக்களிடம் கூறியதாவது: நான் ராஜேந்திரா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறேன். நேற்று பள்ளி விடுமுறை என்பதால், நண்பர்களுடன் கல்பனா ரோடு நேதாஜி மைதானத்தில் விளையாடினேன். மதியம் 1.30 மணிக்கு, வீட்டுக்கு சைக்கிளில் சென்றேன். ஆசாத் ரோடு வழியாக சைக்கிளில் சென்றபோது, ஆம்னி வேனில் வந்த சிலர், வேகமாக கதவை திறந்து என்னை உள்ளே இழுத்துக்கொண்டனர். அடுத்த வினாடியே ஆம்னி வேன், அங்கிருந்து புறப்பட்டது. கண் சிமிட்டும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது.


கடத்திய கும்பலில் மூவர் இருந்தனர். அவர்கள் என்னிடம், "உன் அப்பாவிடம் போன் செய்து ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொண்டு வரச்சொல்' என்று மிட்டினர். அதற்கு மறுத்த நான், "என் அப்பாவிடம் அவ்வளவு பணமில்லை' என கூறினேன். எரிச்சலடைந்த கும்பல்,  என்னை சிறிது நேரம் வேனிலேயே வைத்து சுற்றினர். "பணம் கிடைக்காது' என தெரிந்து கொண்ட அவர்கள், முக்கோணம் ஜெ.ஜெ., நகர் அருகே கிணற்றில் வீசி விட்டு சென்றனர். அதன்பிறகு தான் சத்தம் போட்டேன்.இவ்வாறு, சிறுவன் கூறினான்.


இதைக்கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, சிறுவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையின்போது சிறுவன் கூறியதாவது: நண்பர்களுடன் விளையாடி விட்டு, மதியம் வீட்டிற்கு சாப்பிட தனியாக சைக்கிளில் கிளம்பினேன். கடையில், தண்ணீர் குடித்து விட்டு சைக்கிளில் புறப்பட்ட போது ஆம்னி வேனிலிருந்த மூன்று பேர் தூக்கிச்சென்றனர். "உன் அப்பா தங்க நகைக்கடை வைத்துள்ளார். அவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொண்டு வருமாறு கூறு' என மிரட்டினர். "எங்கப்பாவிடம் அவ்வளவு பணமில்லை; சம்பளத்திற்குத்தான் வேலைக்குச் செல்கிறார்' என்றேன்.


இதை கேட்டு, ஆத்திரமடைந்த மூன்று பேரும், முக்கோணம் அருகேயுள்ள கிணற்றில் தூக்கி போட்டுவிட்டு சென்றனர். அவ்வழியாக சென்ற சிலர், கிணற்றில் இருந்து நான் கூச்சல் போட்டதை பார்த்து காப்பாற்றினர்.இவ்வாறு, சிறுவன் தெரிவித்தான்.சிறுவனின் தந்தை கோவிந்தராஜ் கூறுகையில்,"" ஸ்ரீதர் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் விளையாட சென்றுள்ளான். மகன் பணத்திற்காக கடத்தப்பட்டதும், மீட்கப்பட்டதும் அறிந்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தேன். யார் இப்படி செய்தனர் என்று தெரியவில்லை. மகன் உயிருடன் வந்தது நிம்மதியளிக்கிறது,'' என்றார். இச்சம்பவம் குறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.




போலீசார் சந்தேகம் : பள்ளி மாணவன் கூறும் "கடத்தல்' சம்பவம் பற்றி உடுமலை டி.எஸ்.பி., முருகானந்தம் கூறியதாவது:கடத்தல் புகார் பற்றி போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடம், கிணற்றில் வீசப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தேன். மாணவனின் பெற்றோரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர். கடத்தப்பட்டதாக புகார் கூறும் மாணவன் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில், பல விதமான சந்தேகங்கள் எழுகின்றன. "கடத்தல் சம்பவம் உண்மையானதா' என்று விசாரித்து உறுதிப்படுத்திய பிறகே அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்வோம். இவ்வாறு, டி.எஸ்.பி., தெரிவித்தார். Download As PDF

உடுமலையில் திருக்கார்த்திகை தீப தரிசன விழா

பூபாலன்(BOOBALAN) 1 comments

http://a10.idata.over-blog.com/500x375/1/96/91/82/dieu/deepam-002.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEGZgEyWB7ijgRzv4jPoa9oqKYxTvs5rpGalaUXg3SyzQmnEGpncACx7ojLm0lCGBb48Mt3RleeQuMTiShV0mBa3dTlEW8PzJmhBJQK241J8dlkxusyEXDT0rts4HY1V1OSw6zsgnQpzU/s1600/Karthigai-Deepam-Festival-Celebration.jpg 




உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், திருக்கார்த்திகை தீபதரிசன விழா நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், திருக்கார்த்திகை தீபதரிசன விழாவையொட்டி, காலை 8.00மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன.   மாலை 6.00 மணிக்கு சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து  இரவு 7.00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. உடுமலை மாரியம்மன் கோவிலில், பவுர்ணமி மற்றும் திருக்கார்த்திகை தீப தரிசன விழா நடந்தது. மாலை 6.00 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. மாலை 6.15 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்யாகவாசன பூஜைகளும், இரவு 7.00 மணிக்கு கார்த்திகை தீப ஆவாகனம், சகஸ்ர தீப தரிசனம், சொக்கப்பனை ஏற்றுதல், கார்த்திகை தீபஸ்தாபனம் உள்ளிட்ட பூஜைகளும் நடந்தன. இரவு 8.00 மணிக்கு உபசாரம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதுபோன்று, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், திருக்கார்த்திகை தீப தரிசன விழா நடந்தது. மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியில் கார்த்திகை தீப திருவிழா  நடந்தது. காரத்தொழுவு அழகு நாச்சி அம்மன் கோவில், சிவன் கோவில், பெருமாள் கோவில்,கடத்தூர் அர்ச்சுனேஸ்வர் கோவில், கொழுமம் சுற்று கோவில், பாப்பான்குளம் முருகன் கேவில்  உள்ளிட்ட மடத்துக்குளம் பகுதி ஊர்களிலுள்ள கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. வழிபாட்டில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். Download As PDF

உடுமலைபேட்டை -சிவசக்தி காலனி -actor vijay donating 108 cows to poor people photos

பூபாலன்(BOOBALAN) 0 comments










Download As PDF

சிவன்கோவில் ஏரிப்பாளையம்

பூபாலன்(BOOBALAN) 0 comments

Download As PDF

மாவட்ட வரைபடம்

பூபாலன்(BOOBALAN) 0 comments

District Map of Tiruppur Download As PDF

மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

பூபாலன்(BOOBALAN) 0 comments

உடுமலைபேட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் மாரியம்மன் கோவில் ஆகும். வருடம் ஒரு முறை இங்க நடக்கும்  தேர் திருவிழா மிகவும் சிறப்பாக இருக்கும்.http://www.udumalaiinfo.com/news/wp-content/uploads/2010/04/4499541466_96e169593a_b.jpg





Download As PDF

Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

பார்த்தவர்கள்

பார்த்தவர்கள்

free counters free counters
Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket
வானிலை

காலண்டர்


Free Blog Content

அரட்டை அடிக்க

அண்மைய பதிவுகள்

வகைகள்-

  • HOSPITAL PHONE NUMBER (1)
  • UDUMALPET (5)

மொத்த பதிவுகள்

  • ▼  2010 (67)
    • ►  July (5)
    • ►  August (10)
    • ►  October (1)
    • ▼  November (10)
      • மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
      • மாவட்ட வரைபடம்
      • சிவன்கோவில் ஏரிப்பாளையம்
      • உடுமலைபேட்டை -சிவசக்தி காலனி -actor vijay donating...
      • உடுமலையில் திருக்கார்த்திகை தீப தரிசன விழா
      • உடுமலை அருகே சிறுவனை வேனில் கடத்திய கும்பல், கிணற்...
      • உடுமலையில் மாணவியைக் கடத்த முயற்சி: பெற்றோர் பீதி
      • 85 அடியைத் தாண்டியது அமராவதி அணை நீர்மட்டம்
      • அமராவதி அணை நிரம்பியது வெள்ள அபாய எச்சரிக்கை
      • உடுமலையில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க கோரிக்கை
    • ►  December (41)
  • ►  2011 (10)
    • ►  January (4)
    • ►  February (2)
    • ►  March (1)
    • ►  April (1)
    • ►  June (2)
  • ►  2015 (1)
    • ►  October (1)

எங்க இருந்து வந்தவர்கள்

Locations of visitors to this page

என்னை பற்றி-

My Photo

பூபாலன்(BOOBALAN)
View my complete profile

தமிழில் எழுதிட

பின்பற்றுபவர்கள்

முக்கிய பதிவுகள்

Loading...

மொழி மாற்றம்

Google-Translate-Chinese (Simplified) BETA Chinese
Google-Translate-English to French French
Google-Translate-English to German German
Google-Translate-English to Italian Italian
Google-Translate-English to Japanese BETA Japanese
Google-Translate-English to Korean BETA Korean
Google-Translate-English to Russian BETA Russian
Google-Translate-English to Spanish Spanish

Powered By

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

உள் நுழைய

Enter your username and password to enter your Blogger Dasboard


page navigation

Blogger Widget

UDUMALAIPETTAI(உடுமலைப்பேட்டை)

Powered by Blogger.

பகிர்ந்தவர்களின் எண்ணிக்கை

பகிர்ந்து கொள்ள

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

பகிர்ந்து கொள்ள

Share
 

Copyright © 2010 UDUMALAIPETTAI(உடுமலைப்பேட்டை)

Icons & Wordpress Theme by N.Design | Blogger Templates by Blog and Web