உடுமலைப்பேட்டை
?உடுமலைப்பேட்டை தமிழ் நாடு • இந்தியா | |
| |
அமைவிடம்: | |
நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
பரப்பளவு | 7.41 ச.கி.மீ (3 ச.மை) |
மாவட்டங்கள் | திருப்பூர் |
மக்கள் தொகை • மக்களடர்த்தி | 59,639 (2001) • 8,048/ச.கி.மீ (20,844/ச.மீ) |
நகராட்சித் தலைவர் | வேலுசாமி |
ஆணையர் | சுந்தராம்பாள் |
குறியீடுகள் • அஞ்சல் • தொலைபேசி • வாகனம் | • 642 1XX • +91 04252 • TN 41 & TN 42 |
இணையத்தளம்: www.municipality.tn.gov.in/Udumalaipet/ |
உடுமலைபேட்டை (இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
பழநி, திருமூர்த்திமலை, திருமூர்த்தி அருவி ஆகியவை இதை சூழ்ந்துள்ள சுற்றுலாத்தலங்கள் ஆகும். இவ்வூரில் காற்றாலைகள் நிறைய காணப்படுகின்றன.
உடுமலைபேட்டையில் நிறைய நூற்பாலைகள் உள்ளன . கல்வி அறிவு நிரம்பிய நகரமாகும் .
|
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 58,893 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். உடுமலைபேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உடுமலைபேட்டை மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
புகழ்பெற்ற மனிதர்கள்
- உடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்.
- சாதிக்பாட்சா முன்னாள் அமைச்சர்.
கல்லூரிகள்
உடுமலைப்பேட்டையில் மூன்று கல்லூரிகள் இயங்கி வருகின்றன. வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலைக்கல்லூரி ஆகிய இரண்டு தனியார் கல்லுரிகளும் அரசு கலைக்கல்லூரி ஒன்றும் உள்ளது.
Download As PDFPrint this post
0 comments: (+add yours?)
Post a Comment