உடுமலை: உடுமலை, கிளை போக்குவரத்து கழகம் மூலம், கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கும் திட்டம் குறித்து, அரசு ஓராண்டுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கிராமப்புற பயணிகள் வேதனைக்குள்ளாகின்றனர்.
உடுமலை, கிளை போக்குவரத்து கழகத்தின் கீழ், 102 கிராமப்புற மற்றும் தொலைதுார வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திண்டுக்கல், பழநி பகுதிகளுக்கு பிரதான வழித்தடமாக இருப்பதால், பயணிகளின் கூட்டம் அதிகளவு இருக்கும். சுற்றுப்பகுதியிலுள்ள, 72 ஊராட்சிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி குறைவாகவே உள்ளது. ஆண்டுதோறும், புதிய பஸ்கள் வழங்கப்படும் போது, கூடுதலாக உள்ள பஸ்களை பஸ் வசதி குறைவாக உள்ள கிராமங்களுக்கு இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.
நடப்பாண்டில், கடந்த ஜூன் மாதம் கோவை மண்டலத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு ஆறு பஸ்கள் வழங்கப்பட்டன. உடுமலை கிளை போக்குவரத்து கழகத்திற்கு ஒரு பஸ் கூட வழங்கப்படவில்லை. இரண்டாம் கட்டத்தில், பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இம்முறையும் ஏமாற்றத்தையே அரசு உடுமலை பகுதி மக்களுக்கு வழங்கியுள்ளது.
போதிய பஸ்கள் இல்லாததால், பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலையை சுற்றி, சுற்றுலா மையங்கள் இருப்பதால், பண்டிகை காலங்களில் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களே மாற்று பஸ்களாக விடப்படுகிறது. அந்நேரங்களிலும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். ஒரு நாளைக்கு, காலை மற்றும் மாலை என இரு நேரத்துக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் கிராமங்களும் உள்ளன. பஸ் வசதி தேவையாக உள்ள கிராமங்களுக்கு, கூடுதல் பஸ்கள் இயக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். போக்குவரத்து கழகத்தினர் கூறுகையில்,'பஸ்களுக்கான கூண்டு அமைப்பதற்கு, ஆண்டுதோறும், மண்டலத்திற்கு முப்பது பஸ்கள் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது, ஒரு மண்டலத்திற்கு பத்துக்கும் குறைவான எண்ணிக்கையில்தான் புதிய பஸ்களுக்கான கூண்டு அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவே பிரச்னைக்கு காரணம்' என்றனர்.
Download As PDF
EARN MONEY WITHOUT INVESTMENT
கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லை, உடுமலை வட்டார மக்கள் வேதனை
OctFriday,16,
Subscribe to:
Posts (Atom)